இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டதாக அந்தநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மோஷே ஆபெலுக்கும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவுக்கும் இடையில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சில் வைத்து குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதலுடன் அந்த நாட்டின் விவசாயத் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. Read more
ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்புக்கான உதவி உயர்ஸ்தானிகராக இலங்கையைச் சேர்ந்த ருவேந்திரினி மெனிக்திவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.