யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றையதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் இ.நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அபிராமி இராசதுரை, பாடசாலையின் பழைய மாணவியும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் விடுதி முகாமையாளருமான அருள்நந்தினி ஜொபின்சன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 09 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.A சகாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி விஸ்வமடுவில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.
தபால் சேவை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் இன்று இரண்டாவது நாளாகவும் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. மத்திய தபால் பரிமாற்றகத்தில் இன்று எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், ஏனைய மாகாணங்களில் உள்ள தபாலகங்களிலும் இதே நிலைமை தொடர்ந்தது. வவுனியா, கிண்ணியா, மட்டக்களப்பு, நுவரெலியா, ஹற்றன், டிக்கோயா உள்ளிட்ட தபால நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் சேவைகளப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது தமது கடமைகள் தொடர்பான தரவுகளை அதிகாரிகள் வழங்க மாட்டார்கள் எனவும் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் S.போப்பிட்டிய தெரிவித்தார். போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.