தபால் சேவை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் இன்று இரண்டாவது நாளாகவும் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. மத்திய தபால் பரிமாற்றகத்தில் இன்று எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், ஏனைய மாகாணங்களில் உள்ள தபாலகங்களிலும் இதே நிலைமை தொடர்ந்தது. வவுனியா, கிண்ணியா, மட்டக்களப்பு, நுவரெலியா, ஹற்றன், டிக்கோயா உள்ளிட்ட தபால நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் சேவைகளப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இந்திய சுற்றுலா ஹோட்டல் வலையமைப்பான தாஜ் குழுமத்தின் வேலைத்திட்டத்திற்காக நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களின் கட்டடங்களை விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.