மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.மரியறோசறி (செல்வி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் ஆனைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் என்பனவற்றிற்கு முதலுதவிச் சிகிச்சைப் பெட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்களும் தீபாவளி தினத்தில் வழங்கி வைக்கப்பட்டன. Read more
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும். நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் வரவு செலவு திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று(13) தீர்ப்பளித்தது. மயிலத்தமடு – மாதவனையில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில், அத்துமீறி குடியேறியதாகத் தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் இன்று(13) இறுதி தீர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.