நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் EXIM வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, Paris Club உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி, Bloomberg செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது. இதன் ஊடாக இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் வழங்குனர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. Read more
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் கடந்த 8ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் காணாமல்போன பெண்ணின் கணவரினால் வவுனியா காவல்நிலையத்தில் நேற்று (16) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.