வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் கடந்த 8ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் காணாமல்போன பெண்ணின் கணவரினால் வவுனியா காவல்நிலையத்தில் நேற்று (16) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.