தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரிச்சுமை, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தேசிய வளங்களை விற்பனை செய்தல் மற்றும் அடக்குமுறை சட்டங்களை இயற்றுவதற்கு எதிராக அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்கந்த சந்தியில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியிருந்தது. Read more
சுகாதார அமைச்சின் செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த ஓய்வுபெறவுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக சில காலம் செயற்பட்டிருந்தார். பின்னர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் பதவிகளிலும் அவர் செயற்பட்டிருந்தார்.