Header image alt text

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழுவின் கருத்தாடல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 8400 ஊழியர்களுக்கும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 180 நாட்களுக்கு மேல் பணிபுரியும் சாதாரண தொழிலாளர்கள் இதன் மூலம் உறுதி செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் துரித அபிவிருத்தி இலங்கையின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாவது உலக தெற்கின் குரல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.