யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். Read more
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று(20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பமானது. கடந்த செப்டம்பர் மாதம் 6Mk; திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி செப்டம்பர் 15 ஆம் திகதி வரை முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 17 எலும்புக்கூடுகள், உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.