முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று(20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பமானது. கடந்த செப்டம்பர் மாதம் 6Mk; திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி செப்டம்பர் 15 ஆம் திகதி வரை முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 17 எலும்புக்கூடுகள், உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில், சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.