2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. வாக்கெடுப்பின் போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 45 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான Shen Yiqin பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று(20) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு சீனா வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் தினேஷ் குணவர்தன, கடன் நெருக்கடியின் பின்னர் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.