Header image alt text

சபைக்குத் தலைமை தாங்குகின்ற தலைவர் அவர்களே!
வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய காவல் நிலைய மரணம் தொடர்பான ஒரு விடயத்தை இந்த சபையிலே கூறுவதற்கு நான் விளைகிறேன்.
முதலாவதாக, இந்த மாதம் எட்டாம் திகதி நாகராஜா அலெக்ஸ் என்ற 28வயதான ஒரு இளைஞர் சித்தங்கேணி பகுதியிலே வட்டுக்கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 8ம் திகதி பிடித்தவர்கள் பின்பு 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

Read more

2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்படவுள்ளது. உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. Read more

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். நாட்டில் தாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் நடத்தப்படுவது உறுதியெனவும் அவர் குறிப்பிட்டார். இரு தேர்தல்களையும் காலம் தாழ்த்தாது ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.