அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். நாட்டில் தாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் நடத்தப்படுவது உறுதியெனவும் அவர் குறிப்பிட்டார். இரு தேர்தல்களையும் காலம் தாழ்த்தாது ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.