உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில், அரசியலமைப்பு பேரவையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வதற்கு, நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதை அவதானிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசாங்கம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத எதிர்ப்பு உரிமை ஆகியவற்றை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.