கழகத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான தோழர் விசுபாரதி (ஜி.ரி.லிங்கநாதன்) அவர்களின் மூத்த சகோதரி திருமதி நாகரத்தினம் கமலாதேவி அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று 26.11.2023 காலை வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஏழாம் ஓழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதி நிகழ்வில் தமிழ் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து இறுதிக்கிரியைகள் இடம்பெற்று முற்பகல் 11.40 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

