ரொஷான் ரணசிங்க அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணசிங்க வகித்த அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(27) நடவடிக்கை எடுத்திருந்தார். விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்கவை நீக்குவதற்கான கடிதம், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(27) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வழங்கப்பட்டிருந்தது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார்.