நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். இதனால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்சினைகளால் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் F.அலிப்ரஹிம் (Fisal F.Alibrahim) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று(27) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.