Header image alt text

சபாநாயகர் அவர்களுக்கு நன்றி
கௌரவ பிரதமர் அவர்களினுடைய மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பேச்சின்படி, இரண்டு கட்சிகளுமே தேர்தலை நடாத்த வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு பாராளுமன்றில் சொல்கிறார்கள்.
தேர்தல் நடத்துவதிலே இருக்கக்கூடிய பிரச்சினைகள் சம்பந்தமாக பேசப்படுகின்றது. எங்களுடைய உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்கள் பழைய முறையிலே சென்று தேர்தலை நடத்த முடியும் என்று தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
ஆகவே இந்த இரண்டு கட்சிகளையும் பொறுத்தமட்டில் அல்லது வடகிழக்கைத் தவிர்த்து தென்னிலங்கையை அல்லது மற்றைய இடங்களைப் பொறுத்தமட்டில், மாகாண சபை என்பது ஒரு அதிகார போட்டிக்கான விஷயமாக இருக்கிறதே ஒழிய தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் இது ஒரு முக்கியமான விசயமாக, ஆகக் குறைந்தது சிறிதளவாவது நாங்கள் எங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய விடயங்களை பார்ப்பதற்கான ஒரு சபையாக அதைப் பார்க்கின்றோம்.

Read more

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளை வௌியிடுவதற்கு தாமதம் ஏற்படுகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர இன்று சபையில் கேள்வியெழுப்பினார்.  இதற்கு பதில் வழங்கிய போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார். Read more

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் மனித​நேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் மீண்டும் நீடிக்கவுள்ளது. அதற்கமைய, கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள Mines Advisory Group எனப்படும் MAG மற்றும் HALO Trust நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 23 கோடியே 80 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. Read more

29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…