நன்றி பிரதி சபாநாயகர் அவர்களே!
இன்று இந்த நெடுஞ்சாலைகள் அமைச்சு விவாதத்திலே முதற்கண் கௌரவ அமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
Sir, I like to thank the Honorable Minister for two things. One in Jaffna. there were two roads very very badly affected, and I asked the Honorable Minister, (three roads actually) somewhere in early this year, and he promised that he will do that road in August or September this period and the work is started. Most of the work is done but still part of roads, especially the roads Jaffna Manipay karainagar, the other one is Kattuvan Chankanai Mallagam and the third one is Puththur Chunnakam.

Honorable Minister has allocated the money and the work is carried out. But now it is stopped. But the problem is the ABC had late, now it is the rainy season. The carpet is not laid yet. Because of the rainy season, a part of it, it is again destroyed, slowly, slowly, slowly.
Therefore that work also must be done as soon as possible otherwise the money spent about 100 million rupees a kilometer for the ABC’s being spent that will be go waste. So please sir, before the road is completely destroy allocate the money and them to finish that job. ABC’s late but the carpet is not done. So, if you can allocate the money I was told that it is stop because of the money now so please if you can do it sir I will be happy sir.
ஏபி.சி போட்ட வீதிகளை கட்டாயமாக எவ்வளவு விரைவாக முக்கியமாக காரைநகர் வீதி. காரைநகர் வீதி பகுதியிலே பல தூரம் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை இருக்கின்றது. ஏறக்குறைய வலக்கம்பறை அம்மன்கோயிலுக்கு அப்பால் பள்ளங்கள் தொகையாக இருந்து கொண்டிருக்கினறது. அதை முடித்துக் கொடுக்க வேண்டும். அதேபோல புத்தூர் வீதியில் கூட செய்யப்பட்ட வீதிகள் பல இப்போது பழுதாகிக்கொண்டு வருகின்றது ஏனென்றால் கார்ப்பட் போடப்படாத படியால்தான். இவைகளை செய்யவேண்டுமென நான் அமைச்சரைத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
அடுத்ததாக, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு காலையிலே யாழ். ராணி என்ற ஒரு புகையிரதம் உத்தியோகத்தர்களுக்காக விடப்படுகின்றது. அது மிகவும் உபயோகமாக இருக்கின்றது. அதேபோல வவுனியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு புகையிரதம் ஓடுமாக இருந்தால், அது நிச்சயமாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் போகின்ற கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குப் போகின்ற உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
அவர்கள் காலையில் சென்று யாழ்ப்பாணத்தில் அலுவல்களை முடித்துவிட்டு பின்னேரம் வரக்கூடியதாக இருக்கும். ஆகவே இந்த புகையிரதத்தையும் இயக்குவதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அது நிச்சயமாக பலருக்கு உதவியாக இருக்கும். அதை கட்டாயமாக செய்யவேண்டும் என்று நான் தாழ்மையாகக் கேட்கின்றேன்.
அதேபோல் காங்கேசன்துறைக்காக செல்லுகின்ற உத்தரதேவி புகையிரதம் காலை 11.50ற்குச் செல்லுகின்றது. அதில் இரண்டாம் வகுப்புக்கு பலர் டிக்கெட் எடுக்கின்றார்கள், தெரியாமல் டிக்கெட் எடுத்துவிடுகிறார்கள். அங்கு இரண்டாம் வகுப்புக்கான கொம்பார்ட்மெண்ட் இல்லை. ஆகவே அவர்கள் மூன்றாம் வகுப்புக்கு செல்லுமாறு பணிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் மூன்றாம் வகுப்பில் போகின்றபோது அவர்கள் ஏறக்குறைய 300 முதல் 400 ரூபாய் அதிகமாக செலவழித்திருக்கின்றார்கள். இந்நிலையமையைப் பார்த்து அவர்களுக்கு இரண்டாம் வகுப்புக்கான கொம்பார்ட்மெண்டை போடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அத்துடன் யாழப்பாணம் புகையிரதம் அதாவது காங்கேசன்துறை கொழும்பு கோட்டை இரவு தபால் புகையிரதத்தில் கடந்த காலங்களில் பேர்த் இருந்திருக்கின்றது. அந்த பேர்த் சுகயீனகார்களுக்கு, வைத்திய சேவைக்காக கொழும்புக்கு வர இருப்பவர்கள் வயோதிபர்கள் இவர்களெல்லாம் சௌக்கியமாக பயணம் செய்வதற்கு அந்த பேர்த் உதவியாக இருந்திருக்கின்றது. அந்த பேர்த் கொம்பார்ட்மெண்டையும் போடுவது ஒரு மிக முக்கியமான விடயமாகவே நான் பார்க்கின்றேன். இதைச் செய்யவேண்டும் என்று நான் அமைச்சர் அவர்களை தாழ்மையாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
அதேபோல் மன்னாருக்கு செலலுகின்ற அந்த புகையிரத்திலே ஏ.சி கொம்பார்ட்மெண்ட் போடுவதற்கான ஒரு முயற்சியையும் எடுக்கவேண்டும். ஏனென்றால் அங்கு பயணம் செய்பவர்களுக்கும் ஏ.சி இல்லாமல் செல்வது அது ஒரு கடினமாக இருக்கின்றது.
அதேபோல இந்த மோட்டார் சைக்கிள்களைக் கொண்டுவந்து புகையிரத நிலையத்திற்கு பக்கத்தில், பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் விடுகிறார்கள். வருகின்றபோது பார்த்தால் தெரியும். வவுனியாவிலேகூட அந்த பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலே ஒரு தொகை மோட்டார் சைக்கிள்கள் பார்க் பண்ணப்பட்டிருக்கும். பயணிகள் எல்லாம் காலையில் வந்து மோட்டார் சைக்கிள்களை அங்கு விட்டுவிட்டு பஸ் எடுத்து தூர இடங்களுக்குச் செல்பவர்கள். அங்கு சைக்கிள் பார்க் இல்லை.
ஆகவே, பெரிய பெரிய ஸ்டேசன்கள் பஸ் ஸ்டாண்களுக்குப் பக்கத்தில் ஒரு இடம் எடுத்து சைக்கிள் பார்க் போட்டுக் கொடுத்தால் இந்த மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பாக இருக்கும். மழை வெய்யிலும் பாதுகாப்பாகவும் இருக்கும். மற்றையபடி களவுகளில் இருந்தும் பாதுகாப்பாக இருக்கும். அதையும் அமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று நான் தாழ்மையாகக் கேட்கின்றேன்.
அடுத்தது நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர அபிவிருத்தி விடயமாக வடமாகாணப் பணிப்பாளர் சமன் திஸாநாயக்க அவர்களை நானும், முன்னைநாள் வலிதெற்கு பிரதேசசபைத் தவிசாளர் தர்சனும் சந்தித்து இதுபற்றி கதைத்திருக்கின்றோம். இருந்தாலும் நான் இதை இதிலேயும் கூறுவது நல்லதென நினைக்கின்றேன். 22ஆம் ஆண்டு வந்த ஒரு வர்த்தமானியின் படி குடாநாட்டிலே இருக்கக்கூடிய பதினேழு சபைகளும் யூ.டீ.ஏக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. யூ.டீ.ஏக்குள் கொண்டு வந்திருக்கின்றபோது இந்த கிராமப்புறங்களிலே இருக்கக்கூடிய பகுதிகளில் அது ஒரு மிக பயத்தையும் பிரச்சினையையும் மக்களுக்குக் கொடுக்கின்றது.
உதாரணமாக என்னுடைய கிராமமான கந்தரோடை முழுவதுமே ஏறக்குறைய சுன்னாகத்திலிருந்து அவ்வளவு இடமும் அந்த யூ.டீ.ஏக்குள்ளே கிறீன் சோன் ஆக வரைந்து காட்டியுள்ளார்கள். (கிறீன் சோன் என்பது கொன்சேர்வேசன் ஏரியா) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளபோது அங்கிருக்கின்ற மக்கள் ஒரு மதில் கட்டுவதற்குக்கூட முடியாமல் அவர்கள் மிகவும் அந்தரப்பட்டு என்னிடம் வந்து முறையிட்டார்கள். அதன் பிறகுதான் நான் பணிப்பாளரைச் சந்தித்து கதைத்தேன். அவர் சொன்னார், அதிலே ஒரு சின்னப் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எல்லாருமாக மீண்டும் இதை அமுல்நடத்துகின்றபோது அந்தப் பகுதிகளிலே இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் இப்படியானவர்கள், முன்னைநாள் தவிசாளர்கள் என இவர்கள் அனைவரையும் கூப்பிட்டு அதைச் செய்வது நல்லது அல்லது முக்கியமாக இந்த நகரங்கள், யாழ்ப்பாணத்தையும் நல்லூரையும் எடுத்துக் கொண்டால் அது நிச்சயமாக யூ.டீ.ஏக்குள் வரலாம். சுன்னாகம், சங்கானை இப்படியான இடங்களை மாத்திரம் இந்த யூ.டீ.ஏயின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவது நல்லது மற்றைய இடங்களை எப்படி பிரதேச சபைகள் பார்த்தனவோ அதேமாதிரி பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அதேநேரம் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் அவர்களுக்கு ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். அவர் உண்மையாகவே நினைக்கின்றார் தான் கிழக்கு மாகாணத்தினுடைய அமைச்சர் என்று, இல்லை அவர் இலங்கை முழுவதுக்குமான அமைச்சர், நாங்கள் அப்படித்தான் அவரைப் பார்க்கின்றோம். வடக்கையும் அங்கிருக்கக்கூடிய வீதிகளையும் கிராம வீதிகளையும் கவனிக்க வெண்டுமென அவரை நான் இச் சபையில் வைத்து அன்பாக கேட்கிறேன்.