Header image alt text

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். Read more

கழகத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான தோழர் விசுபாரதி (ஜி.ரி.லிங்கநாதன்) அவர்களின் மூத்த சகோதரி திருமதி நாகரத்தினம் கமலாதேவி அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று 26.11.2023 காலை வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஏழாம் ஓழுங்கையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. இறுதி நிகழ்வில் தமிழ் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Read more

வவுனியா பூந்தோட்டம் நகரில் அமைந்துள்ள முன்பள்ளி பாடசாலைகள் மாணவர்களுக்கான சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் ஒளிவிழா நிகழ்வுக்கான நிகழ்வுகள் (25/11/2023 ) வவுனியா நரசிங்கர் ஆலய மண்டபத்தில் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினருமான க. சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்த போது..

Read more

மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலத்தில் அத்தியாவசியமானோரை மாத்திரம் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சார சபை மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அடுத்த வருடம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட 25 வீத சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சன்னங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கையில் அணியப்படும் இலக்கத் தகடு ஒன்றும், மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அகழ்வுப் பணி  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.

நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஏழாம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான தோழர் விசுபாரதி (ஜி.ரி.லிங்கநாதன்) அவர்களின் மூத்த சகோதரியுமான திருமதி நாகரத்தினம் கமலாதேவி அவர்கள் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம்.

Read more

இலங்கை சிறுமிகள் மலேசியா ஊடாக வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடற்சார் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 18-க்கும் குறைந்த வயதுடைய சிறுமிகள் மலேசியாவிற்கு கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்காக சட்ட ரீதியான முறையில் கடவுச்சீட்டு பயன்படுத்தப்படுகின்றமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது. இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. Read more

மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக உள்ளிட்ட ஐவர் இன்று (24) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீனத்திற்கு எதிராக முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொரு இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். Read more