Header image alt text

உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில், அரசியலமைப்பு பேரவையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வதற்கு, நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதை அவதானிக்கும் போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசாங்கம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஒன்று கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அச்சுறுத்தல் இல்லாத எதிர்ப்பு உரிமை ஆகியவற்றை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என அந்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

சபைக்குத் தலைமை தாங்குகின்ற தலைவர் அவர்களே!
வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய காவல் நிலைய மரணம் தொடர்பான ஒரு விடயத்தை இந்த சபையிலே கூறுவதற்கு நான் விளைகிறேன்.
முதலாவதாக, இந்த மாதம் எட்டாம் திகதி நாகராஜா அலெக்ஸ் என்ற 28வயதான ஒரு இளைஞர் சித்தங்கேணி பகுதியிலே வட்டுக்கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 8ம் திகதி பிடித்தவர்கள் பின்பு 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

Read more

2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்படவுள்ளது. உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. Read more

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். நாட்டில் தாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் நடத்தப்படுவது உறுதியெனவும் அவர் குறிப்பிட்டார். இரு தேர்தல்களையும் காலம் தாழ்த்தாது ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  வாக்கெடுப்பின் போது,  வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி  45 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான Shen Yiqin பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று(20) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு சீனா வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர் தினேஷ் குணவர்தன, கடன் நெருக்கடியின் பின்னர் பொருளாதாரத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். Read more

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று(20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பமானது. கடந்த செப்டம்பர் மாதம் 6Mk; திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி செப்டம்பர் 15 ஆம் திகதி வரை முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 17 எலும்புக்கூடுகள், உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன. Read more

வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழுவின் கருத்தாடல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. Read more