Header image alt text

‘குயின் எலிசபெத்’ என்ற சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் நாட்டுக்கு வருகைத்தந்த நான்காவது கப்பல் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின் எலிசபெத்’ கப்பலில் 1,930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த கப்பல் இன்று இரவு சிங்கப்பூர் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி குருமண்வெளியில் வசித்து வருபவரும், 1992இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரகுவரன் (க.வரதராஜா) அவர்களின் தாயாருமான கணபதிப்பிள்ளை தங்கரெத்தினம் அவர்களின் வீட்டிற்கு புதிதாக மின்சார இணைப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கு வவுனியாவைச் சேர்ந்த தற்போது கனடா டொரன்ரோவில் வசித்து வரும் திரு. சார்ள்ஸ் ஜோசெப் (ஆரத்தி சுப்பர் சென்டர் உரிமையாளர்) குடும்பத்தினரால் ரூபா 52,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

Read more

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரமாணக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிகாரே, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்மானம்  அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.மரியறோசறி (செல்வி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் ஆனைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் என்பனவற்றிற்கு முதலுதவிச் சிகிச்சைப் பெட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்களும் தீபாவளி தினத்தில் வழங்கி வைக்கப்பட்டன. Read more

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும். நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் வரவு செலவு திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவு திட்டம் இதுவாகும். Read more

மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று(13) தீர்ப்பளித்தது. மயிலத்தமடு – மாதவனையில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில், அத்துமீறி குடியேறியதாகத் தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் இன்று(13) இறுதி தீர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

திருகோணமலை – மொரவெவ பிரதேசத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 3.4 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று(12) பிற்பகல் 1.15 க்கு இந்த  நில அதிர்வு பதிவாகியுள்ளது. கந்தளாய், மொரவெவ, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

12.11.1987 இல் செட்டிகுளம் கல்லாற்று பாலத்தருகில் மரணித்த தோழர்கள் பேர்னாட் (பருத்தித்துறை), கருணாகரன் (பள்ளிமுனை), சேகர் (மண்டான்), தமிழ்த்தம்பி (தி.இராசரத்தினம்- சுழிபுரம்), கரன் (சு.திருநாவுக்கரசு- ஸ்கந்தபுரம்), யோகன் (ஆட்காட்டிவெளி), பிரதிகரன் (கச்சாய்), ஞானராஜ் (ப.மோகன் – பன்குளம்), றமணன் (கனகரட்ணம் – யோகபுரம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

கொழும்பு பேர வாவிப் பகுதியினை ஒரு முக்கிய பொழுதுப்போக்கு இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் கிளார்க் குவே நதியில் உள்ள கேளிக்கை உணவு விநியோகம் மற்றும் சர்வதேச தரத்தை கொண்ட பொழுதுப்போக்கு நடவடிக்கைகள் பேர வாவியில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

11.11.2020ல் வவுனியாவில் மரணித்த அமரர் தோழர் சதீஸ் (முத்தையா வில்வராசா) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று..,
வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பில் இணைந்து செயற்பட்டு வந்ததோடு, தொடர்ந்து கழகத்தின் செட்டிகுளம் பிரதேச உதவிப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர்.

Read more