Header image alt text

• அரச நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரச பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கடந்த 9ம் திகதி சந்தித்து கலந்துரையாடிபோது இடம்பெற்ற கருத்துப் பரிமாறல்களைத் தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. Read more

பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கலையரசன், முஷரப், கபில அதுகோரல, பொதுவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர், கனகர் கிராமத்தில் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வரிக்கொள்கை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதாரத்துறையினருக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more

சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற தோழர் முருகதாஸ் அவர்களுக்கான அஞ்சலி மற்றும்
இறுதி நிகழ்வுகள்…

Read more

• தீபாவளிக்கு மறுநாள் 13ம் திகதி மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் அன்றையதினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை 18 ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் எனவும் மாகாண கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. Read more

திருகோணமலை- பெரியகுளம் பகுதியில் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை (10) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் பகுதியில் பொது மக்கள் சிலர் தங்களுக்கு குடியிருப்பு மற்றும் சுயதொழில் முயற்சிக்கு அரச காணியை வழங்குமாறு கோரி   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

ஹொரவப்பொத்தான- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வானொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (10) காலை   இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவப்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Read more

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம் முன்பாக   வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றையதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் இ.நாகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் அபிராமி இராசதுரை, பாடசாலையின் பழைய மாணவியும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் விடுதி முகாமையாளருமான அருள்நந்தினி ஜொபின்சன் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் இளம்பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 09 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.M.A சகாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி விஸ்வமடுவில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார். Read more