Header image alt text

தபால் சேவை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் இன்று இரண்டாவது நாளாகவும் தபால் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. மத்திய தபால் பரிமாற்றகத்தில் இன்று எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், ஏனைய மாகாணங்களில் உள்ள தபாலகங்களிலும் இதே நிலைமை தொடர்ந்தது. வவுனியா, கிண்ணியா, மட்டக்களப்பு, நுவரெலியா, ஹற்றன், டிக்கோயா உள்ளிட்ட தபால நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் சேவைகளப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. Read more

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது தமது கடமைகள் தொடர்பான தரவுகளை அதிகாரிகள் வழங்க மாட்டார்கள் எனவும் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் S.போப்பிட்டிய தெரிவித்தார். போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  Read more

08.11.2020 இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் கலாமோகன் (அமரர் செல்லத்துரை கலாமோகன்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுகள்… யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, யாழ் கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இவர், கழகத்தின் தமிழீழ மாணவர் பேரவையில் இணைந்து செயற்பட்டார். பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகம் திரும்பும்வரை கழகத்தின் சுவிஸ் கிளையில் இணைந்து செயற்பட்டு வந்தார்.

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாகக் கொண்டு, தூத்துக்குடி –   காங்கேசன்துறை,  தூத்துக்குடி – கொழும்பு,  ராமேஸ்வரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிப்பாளர் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, அவர் பதவி நீக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் மற்றும் பிரதம அதிகாரி உள்ளிட்ட தரப்பினர், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. Read more

இஸ்ரேலின் விவசாயத் தொழிற்துறைக்கு 10 ஆயிரம் இலங்கை பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய ஒப்பந்தமொன்று நேற்று கைச்சாத்திடப்பட்டதாக அந்தநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மோஷே ஆபெலுக்கும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவுக்கும் இடையில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சில் வைத்து குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதலுடன் அந்த நாட்டின் விவசாயத் துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. Read more

ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்புக்கான உதவி உயர்ஸ்தானிகராக இலங்கையைச் சேர்ந்த ருவேந்திரினி மெனிக்திவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் நியூயோர்க் அலுவலகத்தின் பணிப்பாளராக பணியாற்றிவரும் ருவேந்தரினி மெனிக்திவெல, ஏதிலிகள் சார்ந்த பணிகளில் பல தசாப்த கால தொழில்முறை அனுபவத்தை கொண்டவர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06.11.1988 அன்று இந்து சமுத்திரத்தில் மரணித்த தோழர்கள் நிதி (சோமசுந்தரம் சந்திரபாலன் – நெடுந்தீவு), பாப்பா (முல்லைத்தீவு), கோபி (சங்கானை) சின்னசங்கர் (முல்லைத்தீவு), குமார் (தும்பளை பருத்தித்துறை) ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் மூன்றை நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று(6) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, அதாவுல்லா, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பலர் கலந்துக் கொண்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.