 அரசியல் நடவடிக்கைகளின் போது, தான் ஒருபோதும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசியல் நடவடிக்கைகளின் போது, தான் ஒருபோதும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய பகுதி ஆதரவாளர்களுடன் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளாமல் தான் தொடர்ந்தும் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.