 கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை இன்று (06) தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.