அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வரிக்கொள்கை மற்றும் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சுகாதாரத்துறையினருக்கு வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாதீட்டில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.