2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்படவுள்ளது. உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போது, ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், மற்றுமொரு மனு வாபஸ் பெறப்பட்டது.