வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நீதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடந்த 30 வருட யுத்த கால சூழ்நிலையின் போது, வடக்கில் எந்தவொரு இளைஞர் யுவதிகளுக்கும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
2016 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், அந்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் செயற்படுத்தப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.