நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஏழாம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான தோழர் விசுபாரதி (ஜி.ரி.லிங்கநாதன்) அவர்களின் மூத்த சகோதரியுமான திருமதி நாகரத்தினம் கமலாதேவி அவர்கள் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகிறோம்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
25.11.2023.
குறிப்பு : அன்னாரின் பூதவுடல் ஏழாம் ஒழுங்கை, தெற்கிலுப்பைக்குளம், வவுனியா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருப்பதுடன், இறுதிக்கிரியைகள் இடம்பெற்று நாளை (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
தொடர்புக்கு – தோழர் விசுபாரதி (0773585212)