Header image alt text

News

Posted by plotenewseditor on 9 August 2013
Posted in செய்திகள் 

வடக்கில் கூட்டமைப்பை ஐ.ம.சு.மு. தோற்கடித்தால் மட்டுமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் : திஸ்ஸ விதா­ரண

Tissaஎதிர்­வரும் வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தோற்­க­டித்தால் மட்­டுமே நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைக் கண்டு நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்த முடியும் என்று முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­யான லங்கா சம சமாஜ கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கில் இளை­ஞர்கள் மத்­தியில் இன­வா­தத்தை தூண்டி அர­சியல் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது. எந்­த­வொரு நல்ல விட­யத்­தையும் விமர்­சித்தே வரு­கின்­றது. இது சர்­வ­தே­ச­மட்­டத்தில் இயங்­கு­கின்ற இலங்­கைக்கு எதி­ரான சக்­தி­க­ளுக்கு சிறந்த ஆயு­த­மாக அமை­கின்­றது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்கு மக்­களின் இத­யங்­களை வெல்­வ­தற்கு வடக்குத் தேர்­தலை சுயா­தீ­ன­மா­கவும் நேர்­மை­யா­ன­தா­கவும் நடத்­த­வேண்டும். இதனை அர­சாங்கம் கவ­னத்­திற்­கொள்­வது அவ­சி­ய­மாகும் என்றும் அமைச்சர் கூறினார்.கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் : சபையில் சம்பந்தன் எச்சரிக்கை

sambanthanaasfasfஅரசியல் தீர்வு, 13ஆவது திருத்தத்திற்கு மேலான அதிகாரப்பகிர்வு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐ.நா. வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் புறக்கணிக்கவோ அல்லது தான்தோன்தோன்றித்தனமாக செயற்பட்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையை இரத்துச் செய்யவோ முயற்சிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கிலே நிலவியுள்ள காணிப்பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அங்கு நிலவும் நீதியற்றதும் நியாயமற்றதுமான நிலைமைக்கு தீர்வு காணுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வடக்கு – கிழக்கில் எழுந்துள்ள காணி விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரேரணையை சமர்ப்பித்த அவர் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரை நிகழ்த்தியதுடன் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு இராணுவ மற்றும் சிங்களக்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை புள்ளிவிபரங்களுடனும் முன்வைத்தார்.

சம்பந்தன் எம்.பி.யின் பிரேரணைக்கு அஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை

untitledவடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்டு வர­வி­ருந்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை தொடர்­பாக ஆளுந்­த­ரப்பு எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்­பிய ஒழுங்குப் பிரச்­சி­னையால் நேற்று வியா­ழக்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொ­டி­யினால் 10 நிமி­டங்­க­ளுக்கு இடை நிறுத்­தப்­பட்­டன.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக சம்­பந்தன் எம்.பி. சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யொன்றை விவா­தத்­திற்கு சமர்ப்­பிக்க முற்­பட்ட போது ஒழுங்குப் பிரச்­சினை கிளப்­பிய அஸ்வர் எம்.பி.இவ்­வி­டயம் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தில் 177ஃ2013, 178ஃ2013, 179ஃ2013, 180ஃ2013, 236ஃ2013, 237ஃ2013, 238ஃ2013 ஆகிய இலக்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் அதேபோல் 145ஃ2013, 135ஃ2013, 205ஃ2013 ஆகிய இலக்­கங்­க­ளி­லான மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­ப­துடன் அவற்றில் அமைச்சர் ஒரு­வரும் பிர­தி­வா­தி­யாக இணைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் இது நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­பட அமைந்­தி­ருப்­ப­தற்கு அமைய விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்ள முடி­யா­தென்று சுட்டிக் காட்­டினார். அதன் பிர­காரம் இவ்­வி­டயம் தொடர்பில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்­டி­ருக்கும் பிரதி சபா­நா­ய­கரிட­மி­ருந்து தீர்ப்­பொன்றை எதிர்­பார்ப்­ப­தா­கவும் அஸ்வர் எம்.பி. தெரி­வித்தார்.

எனினும் இவ்­வி­ட­ய­மா­னது சபா­நா­ய­கரின் முன்­னி­லையில் பல தட­வை­களும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பேசப்­பட்டு இணக்கம் காணப்­பட்­ட­தற்­க­மைய விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அஸ்வர் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்­சினை தொடர்­பில்­லா­த­தொன்று என ஐ.தே.கட்­சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி. சுட்டிக் காட்­டினார். இதே­வேளை ஜன­நா­யக தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலை­வ­ரான அநுர திஸா­நா­யக்க இதன் போது கருத்து வெளி­யி­டு­கையில், இவ்­வி­டயம் தொடர்­பாக கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் 3 தட­வை­க­ளுக்கும் அதி­மாக பேசப்­பட்­டுள்­ளது. அவற்றில் சபை முதல்வர், ஆளுந்­த­ரப்பு பிர­தம கொறடா இரு­வரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். வடக்கு மக்­களின் காணி பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வது தொடர்பில் ஆளுந்­த­ரப்பில் எவரும் அதன் போது ஆட்­சேபம் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.

எனவே வழக்­குகள் தொடர்­பு­பட்ட விட­யங்கள் அல்­லது ஏனைய காணி பிரச்­சி­னை­களை பற்றி நாம் இங்கு பேச முடியும். ஆகையால் இந்த பிரே­ர­ணையை விவா­திக்க இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று கூறினார். இந்த நேரம் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு நாங்கள் இணக்கம் வெளி­யிட்­டி­ருந்த அதே­நேரம் உறுப்­பினர் ஒருவர் சபையின் பிரே­ரணை தொடர்பில் பிரச்­சினை கிளப்­பு­வ­தற்­கான உரி­மையை மறுக்க முடி­யாது. வழங்கும் தீர்ப்வை தாங்கள் ஏற்­றுக்­கொள்ள தயா­ராக உள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் தான் பிரே­ர­ணையின் பிர­திகள் அர­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கிடைத்­ததன் பின்னர் தான், அதன் உள்­ள­டக்கம் தெரி­ய­வரும் என்றும் ஆளுந்­த­ரப்பின் பிர­தம கொற­ட­வான அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். எனினும் இவ்­வி­டயம் பற்றி கட்சித் தலைவர் கூட்­டத்தைக் கூட்டி சுட்­டிக்­காட்டி ஆராயும் பொருட்டு சபை நட­வ­டிக்­கை­களை 10 நிமி­டங்­க­ளுக்கு இடை நிறுத்­து­வ­தாக சபைக்கு தலைமை தாங்­கிக்­கொண்­டி­ருந்த பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொடி பிற்­பகல் 2.15 க்கு சபைக்கு அறி­வித்தார்.

வெலிவேரிய சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் 100 பேரிடமும் பொதுமக்களிடமும் சாட்சியங்கள் பதிவு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை

வெலிவேரியவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பில் இராணுவத்தினர் 100 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பொதுமக்கள் 100 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் 93 இராணுவ சிப்பாய்களின் துப்பாக்கிகளை நாம் கைப்பற்றியுள்ளோம்.அவை அரச இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையிலேயே ஊடகங்களின் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய எதிர்பார்க்கின்றோம்.   அச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்ததாகவும் கம்பஹா நீதிமன்றில் நீதிவான் டிகிரி ஜயதிலக முன்னிலையில் வெலிவேரிய சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிக்கும் போது கொழும்பு குற்றத்தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி ஜீ. ரணவீர தெரிவித்தார்.

மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய பிக்குவுக்கு அபராதம்

மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய பௌத்த மத குருவிற்கு 13 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டவர் தொம்பே பகுதியைச் சேர்ந்த விகாராதிபதி ஒருவரான இந்தொலேபஞ்சாரதன ஹிமி என்பவருக்காகும். விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட மத குரு குற்றவாளியாகக் காணப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 31ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மஹோதலதாகம என்ற இடத்தில் பொலிஸ் உத்தரவை மீறி வேகமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அச்சமயம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் இருந்ததுடன் அதிக மது போதையில் இருந்ததாகவும் மஹவ பிரதான மஜிஸ்திரேட் ருச்சினி ஜயவர்தன முன் விசாரணைக்கு எடுக்கப்பட் வழக்கில் பொலிஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டதது-

இலங்கைத் தமிழர்களை வாழ வைப்பதே டெசோ உருவாக காரணம் : கருணாநிதி

இலங்கைத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனை தான் இந்த அமைப்பு உருவாகவே காரணம். அந்தச் சிந்தனைக்கு இடம் தராமல் தடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அந்தத் தடையை உடைத்தெறிந்து தமிழர் படை முன்னேறும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் ஆர்ப்பாட்டம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய கருணாநிதி மேலும் தெரிவிக்கையில், Read more

சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்- கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்-

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்,

Sithar ploteஇங்கு கருத்துரைத்த திரு.சித்தார்த்தன் அவர்கள்,

இந்தத் தேர்தலை சாதாரண ஒரு மாகாணசபைத் தேர்தலாக நாங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் வருவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள்தான் நிச்சயமாக காரணமாக இருந்திருக்கின்றது. இந்நாடுகள் அனைத்துமே மிகப் பெரிய அழுத்தத்தை இலங்கை அரசுமீது கொடுத்திருந்தது. அதனால்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் வருகின்றது. Read more

News

Posted by plotenewseditor on 7 August 2013
Posted in செய்திகள் 

பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி

வடக்கிற்கான ரயில்தடம் அமைக்கும் பணிகளில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது. ரயில் சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கையாக நேற்றுமாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர்வரை சென்றடைந்துள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில்சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கனவே ரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக ரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மற்றும் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நவுறு தீவிலுள்ள இலங்கையர்களுடன் தொடர்பு துண்டிப்பு-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்து நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த தமது உறவினர்களுடன் இரு வாரங்களுக்கு மேலாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நவுறுதீவு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடையே கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற மோதலை அடுத்தே அங்குள்ளவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாகாணசபை வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள்-

மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்றுமுதல் மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் ஊடக விநியோகிக்கப்படவுள்ளன. குறித்த இலக்கங்கள் தேர்தல் திணைக்களத்தினால் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இதன்போது, தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெறும் தருணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் தேர்தல்கள் ஆணையாளர், அரசியல்கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தவிர தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது அரச நிறுவனங்களின் உடமைகளை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியுமிக்குமாறும் ஆணையாளர் நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டு போதனா வைத்தியசாலையில் பணிப்பகி ஷ்கரிப்பு-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் சிற்றூழியர் ஒருவரை நேற்றையதினம் இரவு தாக்க முற்பட்டதுடன், அவரை புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மதுபோதையில் குறித்த பெண் சிற்றூழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். சம்;பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நேற்றிரவு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் பொலீசார் கைது செய்ததை அடுத்து வைத்திசாலையின் சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

News

Posted by plotenewseditor on 6 August 2013
Posted in செய்திகள் 

வட மாகாணசபைத் தேர்தலை இரத்து செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு-

வட மாகாணசபைத் தேர்தலை இரத்துச் செய்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.  ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வடமாகாண சபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால், நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின்படி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என அரச தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும் சிங்கள ஜாதிக பெரமுன ஒரு அரசியல் கட்சி என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் ஆணையாளர் அந்தக் கட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை என வழக்கு விசாரணையின்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிறீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

வவுனியாவில் ஒலிபெருக்கி தொடர்பில் கட்டுப்பாடு-

வவுனியா பிரதேச செயலர் பிரிவிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களில், ஒலிபெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேசசெயலர் கா.உதயராசா சகல வழிபாட்டு தலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். வவனியா பிரதேச செலயாளர் பிரிவில் அதீத ஓசையுடன் ஒலிக்க விடப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இவ் விடயம் தொடர்பில் ஒவ்வொரு மத வழிபாட்டு தலங்களும் தத்தமது ஆள்புல எல்லைக்குள் அதாவது உட்பிரகார எல்லைக்குள் ஒலிக்க விடுவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அச் செயற்பாடு பின்பற்றப்படாத நிலை சில மதத் தலங்களில் காணப்படுகின்றன. எனவே புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடிய கவனமெடுத்து தமது வழிபாட்டு தலங்களில் ஒலிக்க விடப்படும் ஒலிபொருக்கிகளின் ஓசையை உட்பிரகாரத்தினுள் மாத்திரம் ஒலிக்கவிடவும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

புங்குடுதீவு கடற்பகுதியில் மேலும் ஒரு சடலம்-

யாழ் தீவக கடற்பகுதியில் மற்றுமொரு ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சடலத்துடன் கரையொதுங்கியதாக இதுவரையில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக யாழ்.தீவக கடற்கரைப் பகுதியில் தொடர்ச்சியாக சடலங்கள் கரையெதுங்கி வருகின்றன. குறித்த சடலம் மீட்கப்பட்டு சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலீசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவருக்கு 35 முதல் 45 வரையான வயது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் தீவகக் கடற்பகுதியில் 7 சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 சடலங்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளன. அதன்படி அதில் 2 ஆண்களது சடலங்களும் மன்னாரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆணின் சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரது என்றும் அடையாளம் காணப்பட்டது. எனினும் மீதமானவற்றில் பெண் ஒருவரது உடலிலும் குழந்தை ஒருவரது உடலிலும் உயிர்பாதுகாப்பு அங்கி காணப்பட்டுள்ளது. இவர்கள் அவுஸ்திரேலியா சென்றவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பேராசிரியர்களை நாட்டிற்கு அழைக்கத் தீர்மானம்-

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது உடன்படிக்கைகளின் பிரகாரம் கடந்த 30 வருடங்களுக்குள் பேராசிரியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஷெனிகா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் நாட்டுக்கு மீண்டும் திரும்பவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றமையினால் வெளிநாடு  சென்றுள்ள பேராசிரியர்கள் நாட்டுக்கு திரும்பும் பட்சத்தில் அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பேர்டி பிரேம்லாலின் இணைப்புச் செயலாளர் இடைநிறுத்தம்-

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் இணைப்புச் செயலாளர் விஜயரத்ன ஹேரத் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த இடைநிறுத்தம் வட மத்திய மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண கல்வி பணிப்பாளர் நிர்மல ஏகநாயக்கவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் இணைப்புச் செயலாளர் விஜயரத்ன மாகாண கல்வி அமைச்சில் கடமையாற்றி வருகின்றார்.

விசாரணை செய்ய இராணுவத்துக்கு அனுமதியில்லை-மன்னிப்புசபை-

கம்பஹா, வெலிவேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்;டு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடாத்த இராணுவத்தினரை அனுமதிக்ககூடாது என அனைத்துலக மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. குடிநீருக்கு போராட்டம் நடத்தியவர்கள்மீது படையினர் தாக்குதல் நடத்தியபோது அதில் மூவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதனையடுத்து உரிய விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவத்தினர் விசாரணைப்பிரிவு ஒன்றை அமைத்துள்ள நிலையில், இதனை கண்டித்துள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் பொலி ட்ரெஸ்கொட், தமது தவறுகள் தொடர்பில் இராணுவம் விசாரணை செய்வது என்பது முற்றிலும் தவறான விடயம் என குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விசாரணைகள் பக்கசார்பற்ற வகையில் நடத்தப்படவேண்டும் என்று ட்ரெஸ்கொட் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடு, சட்டரீதியாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தாம் செய்த தவறுக்காக படையினரே விசாரணை நடத்துவது மீண்டும் அந்த மக்கள்மீது பலப்பிரயோகத்தை மேற்கொள்வதற்கு சமனான விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பு வேட்பாளர்கள் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு-

DSC_0007தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வேட்பாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போதைய நிலைமையில் தேர்தல் அத்துமீறல்கள் இடம்பெறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மிகவும் விரிவாக எடுத்துக் கூறினார்கள். இவ்விடயத்தினை பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சீ.வீ.கே சிவஞானம், அனந்தி எழிலன் உள்ளிட்ட பல வேட்பாளர்களும், பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களான அம்னா மற்றும் மார்ட்டீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

யாழ். கந்தரோடையில் தேர்தல் குறித்த கலந்துரையாடல்-

kanthrodai 01 (2)யாழ். சுன்னாகம் கந்தரோடையில் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கஜதீபன்; ஆகியோரும், வலி தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ் அவர்களும், யாழ். விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது வட மாகாசபைத் தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும், இளைஞர்கள் வாக்காளர்களை கூடுதலான வீதத்தில் வாக்களிக்கச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டியதன் தேவைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கு-

tnaயாழ்ப்பாணம் நவாலி அரசடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கு ஒன்று நேற்றுமாலை இடம்பெற்றது. வலி.மேற்கு பிரதேச சபை அங்கத்தவர்; கஜன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் மானிப்பாய் பிரதேச சபை உப தவிசாளர் சிவகுமார், பிரதேச சபை அங்கத்தவர் மகேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். Read more

மிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக நிகழ்வு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்றுமாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை வவுனியா மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.சந்திரகுலசிங்கம், எஸ்.தியாகராஜா, இ.இந்திரராஜா, எம்.பி.நடராசா, வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், எம்.ரதன், மயூரன், ரவி ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மையாக வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை அனைவரும் வலியுறுத்தி உரையாற்றியுள்ளனர்

சட்டவிரோத குடியேறிகளே எமக்கு சவால்- கெவின் ரட்-

அவுஸ்திரேலியா எதிர்வரும் மாதத்தில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், சட்ட விரோதமாக குடியேறிகள் நாட்டிற்குள் வருவது தமக்கு சவாலாக உள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக தீர்வொன்றை பெறாமல் தேர்தலை சந்திப்பது கடினமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி சார்பாக போட்டியிடும் ரோனி அபோட்டுடன் போட்டியிடுவதாயின் இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண வேண்டிய கட்டாயம் எமக்கு முன்பாக இருக்கின்றது. செப்டம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது கட்சியை முன்னணிக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் கெவின் ரட் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதுவராலயங்களை சிலநாட்கள் மூட நடவடிக்கை-

தீவிரவாதிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாக நேற்று மூடப்பட்ட அமெரிக்க வெளிநாட்டு தூதுவராலயங்களை எதிர்வரும் சனிக்கிழமை வரை மூட அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிரதேசங்களில் உள்ள தூதுவராலயங்களே மூடப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் குறிப்பாக அல் கைடா இயக்கத்தினர் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற புலனாய்வுத் தகவலையடுத்து நேற்று 21 தூதுவராலயங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், முஸ்லீம்களின் புனித ரம்ழான் நிறைவடையும் வரை யேமனில் உள்ள தமது உயர் ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கர்கள் இந்நாட்களில் தமது வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அமெரிக்க ராஜாங்க திணைக்கம் கூறியுள்ளது.

மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக வலியுறுத்தல்-

இலங்கை கடற்பிராந்தியத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், தமிழக மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துவருவதாக மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்பகுதியில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட 29 மீனவர்களின் குடும்பங்களுடன் கலந்துரையாடிய வி.நாராயணசுவாமி, இலங்கை கடலில் மீன்பிடிக்க உரிமை வேண்டுமாயின் அதற்கு இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் எனவே இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்துமாறு நாராயணசாமி மீனவர்களின் உறவினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் களஞ்சியசாலை திறந்து வைப்பு-

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த களஞ்சியசாலை சீனாவின் நிதி உதவியுடன் சுமார் 1000 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருடத்துக்கு 2.5 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறை திறந்து வைக்கப்படுவதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவு ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரிக்குமென அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்-

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேசசெயலர் பிரிவில் நேற்றுமாலை வீசிய சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதமடைந்துள்ளன இவற்றில் 15 வீடுகள் முழுமையாகவும், 48விடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கரடியனாறு பகுதியில் 10 வீடுகள் முழுமையாகவும், 7 வீடுகள் பகுதியளவிலும், மரப்பாலம் பகுதியில் 5 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும், கித்துல் பகுதியில் 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமைடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதிகளுக்கு சென்ற உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் சேத மதிப்பீடுகளையும் மேற்கொண்டு;ள்ளனர்.

அரியாலையில் வெடிபொருள் வெடிப்புச் சம்பவம்

குப்பைக்கு தீ மூட்டியபோது குப்பைக்குள் இருந்த வெடிபொருள் ஒன்று வெடித்ததில் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் 3ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் இருந்த குப்பைகளை காணி உரிமையாளர் தீ மூட்டிய வேளையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த இப்பகுதியில் 2010ஆம் ஆண்டில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 500 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட 368 குடும்பங்களைச் சேர்ந்த 1,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் 4 பாதுகாப்பு முகாம்களை நிறுவியுள்ளதாகவும் கொட்டகலை நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிறி தெரிவித்துள்ளார். நுவரெலியா பிரதேசசெயலகப் பிரிவில் கொட்டகலையில் 90 குடும்பங்களும், ருவன்புரவில் 17 குடும்பங்களும், நுவரெலியா நகரத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை கண்டி மாவட்டத்தின் கம்பளை, சிங்ஹாபிடிய பகுதியில் மண்சரிவு அபாயம் தொடரும் நிலையில் இப்பகுதியில் இருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் கம்பளை, தர்மசோக விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பங்;களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்க கம்பளை பிரதேச செயலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்றையதினம் இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.