தமிழக அரசின் தீர்மானத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை-

20இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து விளக்கம் கேட்கும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மேற்படி மத்திய அரசின் மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது. ராஜீவ் கொலையாளிகள் விடுதலை முடிவு விஷயத்தில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, தமிழக அரசு அவர்களை விடுவிக்க கூடாது. 3 நாட்களில் 7 பேரையும் விடுவிக்க கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும். விடுதலை செய்ய முடிவு எடுத்தது குறித்து இரு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை விடுதலை செய்வது சட்டத்திற்கு முரணானது-இந்திய பிரதமர்-

manmohan sighrajiv gandhi (3)இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் முரணான விடயமாக 7 பேரின் விடுதலை அமையுமென இந்திய பிரதமர் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ராஜிவ் காந்தியின் படுகொலையானது இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் விடயமென மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக தமது நடவடிக்கைகளை எந்தவொரு அரசாங்கமோ அல்லது கட்சியோ இலகுபடுத்த முடியாது எனவும் இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தனது பெற்றோரான முருகன் மற்றும் நளினிக்கு மன்னிப்பு வழங்குமாறு லண்டனின் உயிரியல் மருந்துவ துறையில் கல்விகற்கும் 22 வயதான ஹரித்திரா ஸ்ரீகரன், ராஜிவ் காந்தியின் புதல்வர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய இராணுவத்தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

indian army (1)indian army (3)இந்தியாவின் தெற்கு மண்டல இராணுவக் கட்டளைத்தளபதி லெப்ரினன் ஜென்ரல் அசோக் சிங் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இன்றுகாலை பலாலி படைத்தலைமையகத்தில் அவர் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபேராவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து காலை 11 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இதேவேளை இந்திய தெற்கு இராணுவத் கட்டளைத்தளபதி லெப்டினல் ஜெனரல் அசோக் சிங் மற்றும் துணை இராணுவ கட்டளைத் தளபதி ஆகியோர் பலாலியிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

251 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு-

cafeதேர்தல் சட்ட விதிமுறை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 251 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென கபே தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறல் குறித்து 244 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறைகள் குறித்து 7முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வருமாறு பான் கீ மூனுக்கு அழைப்பு-

unnamed6எதிர்வரும் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும அண்மையில் பான் கீ மூனை சந்தித்தபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் பேரவை அமர்வுகளில் பங்கேற்குமாறு அமைச்சர் அழப்பெரும, பான் கீ மூனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமர்வுகளில் பான் கீ மூன் பங்கேற்பாரா அல்லது தனது பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பாரா என்பது இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் பாலித கொஹன ஆகியோர் கடந்த 18ம் திகதி பான் கீ மூனை சந்தித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போலி வேட்பு மனுக்கள் குறித்து விசாரணை-

desapiryaதெற்கு மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் காணப்படும் போலி தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் உள்ள நபர்களின் பெயர் முகவரிகள் போலியானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது குறித்து ஆராய்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளோம். பாதுகாப்பு பிரச்சினை காணப்படும் அரசியல் கட்சிகள் அது குறித்து தனக்கு அறிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் தீர்மானம் நிராகரிப்பு-

northern-இலங்கையில் மூன்றாவது விமான நிலையத்தை நிர்மாணிக்கும் யோசனை இல்லை என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு நேரடி விமானசேவை நடத்தப்பட வேண்டும் என்று வட மாகாண சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் சிவில் விமான சேவையொன்றை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மாகாணசபைக்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரடியனாறு விபத்தில் 30 பேர் படுகாயம்-

karadiyanaru accidentமட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு சந்தியில் இன்றுகாலை 6.30அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் உட்பட சுமார் 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கரடியனாறு வைத்தியசாலையின் வைத்தியர் கே. சுகுமார் தெரிவித்துள்ளார்.பெரியபுல்லுமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பயணிகள் பஸ்ஸும் செங்கலடியிலிருந்து பெரியபுல்லுமலை நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த ரிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்களில் அநேகர் மாணவர்கள் என்றும் இவர்களில் 15 இற்கு மேற்பட்டோர் தற்சமயம் கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சுமார் 20ற்கு மேற்பட்டோர் சிறுகாயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வைத்தியர் கே. சுகுமார் கூறியுள்ளார். ரிப்பர் சாரதியான அபேசிங்ஹ (வயது 34) படுகாமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு டிப்போவுக்குச் சொந்தமான இ.போ.ச பஸ் வண்டியின் சாரதியும் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியர் மேலும் கூறியுள்ளார்.