அமரர் கந்தையா சபாரத்தினம் அவர்களின் நினைவாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு உதவி-

kadaiahkandaiahdkandaiahskandiaah.யாழ். சித்தன்கேணியில் சித்தன்கேணியூர் அமரர் கந்தையா சபாரத்தினம் (இளைப்பாறிய இறக்குவானை ஓவசியர்) அவர்களின் 100ஆவது பிறந்த தினத்தை ஒட்டி அவரது குடும்பத்தினரால் அப் பகுதியைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் 10 மாணவர்களுக்கு இரண்டு வருடத்திற்கான கல்விக்கான உதவி வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா வாசுதேவக் குருக்களின் ஆசியுடன் 25.02.2014 நேற்று நடைபெற்றது. இதன்போது முதலாவது மாணவருக்கான அறக்கொடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் வழங்கி வைத்து ஆரம்பித்தார் இதனைத் தொடர்ந்து புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தாத்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன், பிரதேச சபை உறுப்பினர் சபாநாயகம் சசிதரன் ஆகியோர் அறக்கொடையை வழங்கி வைத்தனர்.

 

 

அகில இலங்கை சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திரை

 அகில இலங்கை சிவாலய தரிசன துவிச்சக்கர வண்டி யாத்திர நாளையதினம் 27.02.2014 அதிகாலை சித்தங்கேணி சிவ சிதம்பரேஸ்வரர் ஆலய முன்றலில் சிறப்பு வழிபாட்டுடன் பிரம்மசிறி ஞான. சபாரட்ண சர்மாவின் ஆசியுடன் ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்வில் பல துவிச்சக்கரவண்டி ஓட்டங்களில் கலந்து பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்ற ஜேர்மனியில் இருந்து வருகை தந்துள்ள இராஜா. இரத்தினசிங்கம். குணசேகர மற்றும் சுழிபுரத்தை சேர்ந்த வைத்திலிங்கம் கைலைநாதன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இந் நிகழ்வானது 27.02.2014 நாளை காலை 5.30 மணியளவில் சித்தன்கேணி சிவன் கோவில் முன்றலில் ஆரம்பமாகி மானிப்பாய் வீதி ஊடாக மருதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலய முன்றலூடாக நல்லூரை சென்றடைந்து அங்கிருந்து செம்மணிவீதி ஊடாக ஏ32 வீதி ஊடாக பூநகரி முளங்காவில் ஊடாக திருக்கேதீஸ்வரத்தை சென்றடையும். 28.02.2014 அன்று அதிகாலை திருக்கேதீஸ்வரத்திலிருந்து ஆரம்பித்து ஏ32 வீதி வழியாக மாங்குளம் – ஒட்டிசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஊடாக வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தினை சென்றடையும் 01.03.2014 அன்று திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தை சென்றடையும் 02.03.2014 கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தினை சென்றடையும். 03.03.2014 அன்று மொனராகலை சிவன் ஆலயத்தினை செந்றடையும். 04.03.2014 அன்று கதிர்காமத்தினை சென்றடையும். 05.03.2014 மத்தறை 06.03.2014 காலி சிவன் ஆலயம் 07.03.2014 இரத்தினபுரி 08.03.2014 கெழும்பு 09.03.2014 மத்துகம 10.03.2014 புத்தளம் 11.03.2014 அனுராதபுரம் 12.03.2014 வவுனியா 13.03.204 யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம் ஊடாக சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தை வந்தடையும்.