ஜெர்மன் வாழ் புலம்பெயர் உறவுகளின் ‘கல்விக்கு கைகொடுப்போம்’ நிகழ்ச்சித் திட்டம்-
ஜேர்மனி வாழ் தோழர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுகள் வழங்கும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (26.04.2014) காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியில் காரைநகர் பிரதேசசபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி சித்தார்த்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான திரு. க.சபாநாயகம், திரு. ச.சசிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந் நிகழ்வின் தலைவர் ஆனைமுகன் அவர்கள் உரையாற்றும்போது, இன்றைய காலத்தினுடைய தேவையை உணர்ந்து மேற்கௌ;ளப்படும் இவ் உதவி போற்றத்தக்கது. ஜேர்மனியிலிருந்து செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெறும் இச் செயற்பாடு ஏனையவர்களுக்கு ஒர் முன் உதாரணமாக அமைய வேண்டும். இவ் உதவிகளை எமது பிரதேசத்திற்கும் பெற்றுத்தந்த அண்ணண் சித்தார்த்தன் அவர்களுக்கு இந்த இடத்திலே நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என குறிப்பிட்டாh. அத்துடன் எமக்கு இங்கு பாரிய தேவைகள் உள்ளன குறிப்பாக எமது இந்த பிரதேசத்திற்கு முன்பள்ளி மிக அவகியமான ஒன்றாகும் அதனை அமைப்பதற்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் தொடர்ந்து புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது, போருக்கு பிந்திய இன்றைய சூழலில் பலவேறு தேவைகள் மக்கள் மத்தியிலே உள்ளது இத்தேவைகளை வெறுமனே பாராளுமன்ற உறுப்பினரது நிதியிலிருந்தோ அல்லது மாகாணசபை நிதி மூலமாகவோ நிவர்த்தி செய்துவிட முடியாது இவ்வாறான தேவைகளை இனங்கண்டு புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தான் உதவ வேண்டும் இதன் வாயிலாக மட்டுமே மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். இன்று ஜேர்மனியிலிருந்து பல உறவுகள் தோழர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் கல்விக்கு கைகொடுப்போம் என்ற இவ் நிகழ்ச்சி வாயிலாக மாணவர்களுக்கு உதவி வருகின்றனர் இது ஒர் சிறநித எடுத்துக்காட்டாகும் இவ்வாறு ஏனையவர்களும் உதவும் சந்தர்ப்பத்தில் பல தேவைகளை நிறைவு செய்யமுடியும் என்று தெரிவித்தார். இந் நிகழ்வின்போது 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.