Header image alt text

வலி தெற்கில் இளைஞர் கழகங்களின் வருடாந்த விளையாட்டு போட்டி-

ilaignar kalaka vilaiyaattu potti  (1) ilaignar kalaka vilaiyaattu potti  (2) ilaignar kalaka vilaiyaattu potti  (3) ilaignar kalaka vilaiyaattu potti  (5) ilaignar kalaka vilaiyaattu potti  (6) ilaignar kalaka vilaiyaattu potti  (7) ilaignar kalaka vilaiyaattu potti  (8) ilaignar kalaka vilaiyaattu potti  (9) ilaignar kalaka vilaiyaattu potti  (10)யாழ். வலி தெற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களிடையேயான வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் யாழ். கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. உடுவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திரு.எஸ் விஜிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் திரு ரி.பிரகாஷ், யாழ். தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி இயக்குநர் திரு.ஐ.தபேந்திரன், கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு. ஏ.கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் திரு ஆர்.ஈஸ்வரதாசன், முன்னைநாள் வலிதெற்கு பிரதேச சம்மேளனத் தலைவர் திரு.எஸ்பீஷ்மன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு. எஸ்.சண்முகவடிவேல், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் திருஎஸ்.லக்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதுடன், தொடர்ந்து, இறைவணக்கம், மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றன. இதனையடுத்து உடுவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இ.பிரணவரூபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் இதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று, பரிசில்களும்; வழங்கி வைக்கப்பட்டன.

பனிப்புலம் குஞ்சன்கலட்டியில் கல்விக்கு கை கொடுப்போம் நிகழ்வு-

Panippulam Kalvikku Kai koduppom (1) Panippulam Kalvikku Kai koduppom (2) Panippulam Kalvikku Kai koduppom (3) Panippulam Kalvikku Kai koduppom (4) Panippulam Kalvikku Kai koduppom (5)யாழ். வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது ஏற்பாட்டில் பனிப்புலம் குஞ்சன்கலட்டியில் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் தோழர் செல்லத்துரை ஜேகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் தாயக உறவுகளின் கல்வி மேம்பாட்டிற்காக நடாத்தப்படும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்வு நேற்றையதினம் (27.04.2014) இடம்பெற்றது. இந் நிகழ்வானது வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ க.சபாநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. த.சசிதரன், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கிராம பிரமுகரான திரு. சூரசங்காரம் மற்றும் பெரும்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. க.சபாநாயகம் அவர்கள் உரையாற்றுகையில், இந்த கிராமம் பல தேவைகளை கொண்டுள்ளது இந்த வகையில் மாணவாகளின் கல்விக்கு வழங்கப்படும் இவ்உதவி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். Read more

சங்கானை வர்த்தக சங்க அனுசரணையுடன் களியாட்ட விழா-

manippay police kaliyaatta nikalvu (1) manippay police kaliyaatta nikalvu (2) manippay police kaliyaatta nikalvu (3) manippay police kaliyaatta nikalvu (4) manippay police kaliyaatta nikalvu (5) manippay police kaliyaatta nikalvu (6) manippay police kaliyaatta nikalvu (7) manippay police kaliyaatta nikalvu (8) manippay police kaliyaatta nikalvu (9)யாழ். சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலைய களியாட்டவிழா நேற்று (27.04.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் கோவிலுக்கு அருகாமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வின்போது மரதன் ஒட்டப்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் தேசிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் சிவகுமார், பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், விளையாட்டுப் போட்டியினை பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பஹ்ரெயினுக்கு விஜயம்-

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றுகாலை பஹ்ரெயினுக்கு சென்றுள்ளார். பஹ்ரெயின் மன்னரை சந்தித்து ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதிக்கும் பஹ்ரெயின் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. பஹ்ரெயினின் வர்த்தக சமூகம் மற்றும் அந்த நாட்டில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வேயில் நெடியவனை தேடும் நடவடிக்கை-

புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை அடுத்து நோர்வேயில் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெடியவனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் நோர்வே பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அச்செய்திகள் மேலும் கூறுகின்றன. மேலும் நோர்வேயின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் இடங்கள் அனைத்திலும் நெடியவனைத் தேடி பாதுகாப்பு தரப்பினர் வலைவிரித்துள்ளதாக மேற்படி செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத விவகாரங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு வசதி-

மத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு இன்று தனது பணியினை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி இவ் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படவுள்ளது. இந்நிலையில் மத விவகாரங்கள் தொடர்பில் 011 2307674, 011 2307694 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 011 2307688 என்ற தொலை நகல் இலக்கம் மூலமாக முறைப்பாடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபை முன்பாக ஆர்ப்பாட்டம்-

vada makana sabaimun aarpattam (1) vada makana sabaimun aarpattam (2) vada makana sabaimun aarpattam (3) வட மாகாணசபை பேரவை செயலகம் முன்பாக மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை வட மாகாணசபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரி மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் மகஜர் கையளித்தபின் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

தேர்தல் சட்ட மாற்றம் தொடர்பில் பவ்ரல் அவதானம்-

தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் நிறைவுபெற்றதை அடுத்து தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் சட்ட மாற்றம் கொண்டு வருவது குறித்து பெப்ரல் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.