Header image alt text

தமிழ் மக்களைப் பொறுத்தவரை முன்னேற்றகரமான தீர்மானம்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

Sithar ploteஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்க அனுசரணைடனான தீர்மானம் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வரவேற்கத்தக்க முன்னேற்றகரமானதொன்றாகும் என புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவினால் மூன்றாவது தடவையாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க அதேவேளை முன்னைய தீர்மானங்களை விட முன்னேற்றகரமானதுமாகும். இருந்தபோதும் இத்தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது தொடர்பில் ஐ.நா என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றத என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றது. மேலும், இந்தியா இம்முறை வாக்களிக்காது நடுநிலைமை வகித்தது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றமாக இருந்தாலும் அவர்கள் என்ன காரணத்திற்காக வாக்களிக்கவில்லை என்பது குறித்து இந்தியா சரியானதொரு, தெளிவான பதிலைக் கூறவில்லை. இந்தியா மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு நேரடியாக ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றபோதிலும் இம்முறை வாக்களிக்காதது ஒரு புரியாத ஏமாற்றமாகவே இருக்கின்றது. ஆகவே, இது தொடர்பில் நாம் இந்திய அதிகாரிகளுடன் பேசி தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைமையை உருவாக்க வேண்டும். Read more

தீர்மானம் குறித்து மிஷேல் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கம்-

இலங்கைமீது ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷேல் ஜே.சிஸன் நேற்று விளக்கியுள்ளார். மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம், மனித உரிமைகள் தொடர்பான இலங்கைமீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டுமென கூறினும், இலங்கையில் சுயாதீனமான நம்பகமான விசாரணை இலங்கைக்கு நன்மையானதாக அமையுமென அவர் கூறியுள்ளார். இந்த தீர்மானம் காரணமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவில் எந்த மாற்றமும் ஏற்படாதெனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் வடக்கு கிழக்கில் மனித உரிமை பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதல்கள், சிறுபான்மை மதத்தினர்மீதான தாக்குதல்கள் போன்ற விடயங்களும் முன்னேற்றமின்றி அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேல் மற்றும் தென் மாகாண சத்தியப்பிரமானங்கள்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டுள்ளனர். இரு மாகாணசபைகளிலும் முன்னாள் முதலமைச்சர்களான ஜான் விஜேலால் டி சில்வா மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சந்திப்பிரமாணம் செய்துகொண்;டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதவிர, ரஞ்சித் சோமவன்ச, நிமல் லன்சா, உதய கம்மன்பில மற்றும் உபாலி கொடிகார ஆகியோர் மேல்மாகாண சபையின் அமைச்சர்களாக நியமனம் பெற்றுக்கொண்டனர். இதனிடையே, தென் மாகாண சபையின் அமைச்சர்களாக டி.வி.உப்புல், யு.டி.ஆரியதிலக்க மற்றும் சந்திமா ராசபுத்ர ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இதற்கு மேலதிகமாக மாகாண சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து தெரிவாகிய உறுப்பினர்களும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் படையினர் குடும்ப விபரங்கள் சேகரிப்பு-

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடும்பங்களின் விபரங்களை இராணுவம் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 01ஆம் திகதி தொடக்கம் குடும்பங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் விபரங்கள் மற்றும் குடும்பத் தகவல்களைத் திரட்டும் பொருட்டு சுமார் 42வினாக்கள் அடங்கிய வினாக்கொத்து இராணுவத்தினரால் பூர்த்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவில் எறிகணைகள் மீட்பு-

முல்லைத்தீவு, கற்சிலைமடு பகுதி கிணறொன்றிலிருந்து 17 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் தேடுதல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். கற்சிலைமடுவிலுள்ள வீட்டு கிணற்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டினை வாடகைக்கு எடுத்த நிறுவனமொன்று வீட்டின் கிணற்றினை துப்புரவு செய்யும் வேளையிலேயே மேற்படி எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கல்விதான் நிரந்தர சமூக வளர்ச்சி, வவுனியாவில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

unnamed (5)unnamed (3)unnamed (4)unnamed (6)unnamed (7)unnamed (9)unnamed (10)unnamed (11)unnamed (12)unnamed (13)unnamed (14)

unnamedCAUL6QE0unnamedCAUJJD58

unnamedCAFRBBHSunnamed6

unnamedCA75IPFQ

unnamedCAFNWEN9

unnamed5unnamedCA1EK1YX

unnamedCASQJ7ZCunnamedCA52PSIQ

unnamed 4unnamed3

unnamedCAIEHI27unnamedCAG9KVQI

unnamedCA9QBLEIunnamedCAO1YPEG

unnamedCA9FZYDMunnamedCAIY0KO6

unnamedCAO09L1IunnamedCAQ280D0

unnamed 2unnamedஇன்று வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மூத்த உறுப்பினர் அமரர் தோழர் கோன் அவர்களின் நினைவாக பல நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது நிகழ்வாக, வவுனியா தாண்டிக்குளத்தில் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான அமரர். தோழர் செல்லர் இராசதுரை (கோன்) அவர்களது நினைவாக லண்டனில் வசிக்கும் தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பு நிலையத்தை இன்றுகாலை 10 மணிக்கு புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்து வைத்தார். அவருடன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், பிறமண்டு வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. மஞ்சுளா திருவருள்நேசன் மற்றும் புளொட்டின் பல சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் மேற்படி திறப்பு விழா நடைபெற்றது. இவ் திறப்பு விழாவில் அமரர். தோழர் செல்லர் இராசதுரை (கோன்) அவர்களின் சகோதரி மகேஸ்வரி மைத்துனர் தர்மகுலசிங்கம் வவுனியா பிறமண்டு வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் இரண்டாம் நிகழ்வாக புளொட் தலைவர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களால் துவிச்சக்கர வண்டியொன்று பொன்னாவரசன்குளத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் வைஷ்ணவிக்கு வழங்கிவைக்கப்பட்டது. இன்றைய ஆரம்ப நிகழ்வின்போது விருந்தினர்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களினால் மாலைகள் அணிவிக்கபட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து லண்டனில் வசிக்கும் தோழர். தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பின்கீழ் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாடசாலை வலைப்பந்தாட்ட அணிக்குரிய சீருடைகள், கூடைப்பந்தாட்ட அணிக்குரிய சீருடைகள் என்பனவற்றை வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி திருவருள்நேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது  இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் (முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் கௌரவ விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முறைசாரா பிரிவு ஆலோசகர் திரு கே.திருவருள்நேசன், கல்வி மேம்பாட்டு ஆலோசகர் திருமதி யு.சுஜாத்தா, தொழில் ஆலோசகர் திருமதி கிறேனியர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். பாடசாலை அதிபர் தனது தலைமை உரையில், பல வருட இடப்பெயர்வுகள், அகதி முகாம்கள் காரணமாக இயங்காமல் இருந்து தற்போது தமது கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கும் இக்கால வேளையில் மனவேதனை அளிப்பது யாதெனில் எமது பாடசாலையை சூழ்ந்த கிராம மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைக்கு செல்கின்றனர், இதற்கு காரணம் தனிப்பட்ட இடத்தில் பாடசாலை அமைந்துள்ளதுதான். நகரத்தை அண்டிய பாடசாலையாக இருந்தும் வள பற்றாக்குறையுடன் இயங்கினாலும் லண்டனில் வசிக்கும் நாகராஜா அவர்களின் பங்களிப்பால் எமது பாடசாலை அதிக வளப்பலம் பெற்று வருகிறது. எனினும் நிரந்தர காவலாளி இன்மையால் பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று உரையாற்றியதுடன் இதனை நிவர்த்திசெய்யுமாறு நலன்விரும்பிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினரும் புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அமரர் தோழர் கோன் நினைவாக தோழர் நாகராஜா தொடர்ந்து செய்துவரும் உதவிகளுக்கு எமது அமைப்பின் அனைவரது சார்பிலும் நன்றியை தெரிவிக்கின்றேன். தமிழர்களில் நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் இன்றும் எமது சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. வடமாகாண மாணவர்களின் கல்விநிலை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது மிகப் பாரிய பின்னடைவை அடைந்து படிப்படியாக உயரும் இன்றையநிலையில் பலதடைகள் இருப்பினும் எமது சமூகத்தில் கல்விதான் நிரந்தர சமூக வளர்ச்சியாகும். புலம்பெயர் உறவுகளுக்கு எமது அமைப்பின் மூலம் நாளாந்தம் பல தகவல்கள் அனுப்பபட்டு உதவிகள் மேற்கொள்ளபட்ட வண்ணமுள்ளதை யாவரும் அறிவீர்கள். கல்வி வளர்ச்சிக்கு பௌதீக வளங்கள் மட்டும் அல்ல, அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படும்போது எமது சமூகம் ஓர் உன்னத வளர்ச்சிப்பாதையில் செல்லமுடியும், எனினும் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்தவேண்டும். இன்றைய இளைஞர்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல நல்லொழுக்கம், கல்வி, விளையாட்டு போன்றவற்றில் அவர்களை அக்கறைகொள்ள வைக்க வேண்டும், தோல்வியும் வெற்றியும் மாறிமாறி வந்தாலும் மீண்டும் எமது சமூகம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிதான் எமது சமூக வாழ்கையை மாற்ற முடியும். இன்று எமக்கு முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், கல்வி வளர்ச்சியில் என்றும் முயற்சி எடுக்க பின்னிக்கபோவதில்லை என தெரிவித்தார். இங்கு உரையாற்றிய சிறப்புவிருந்தினர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள்,  எமது அமைப்பின் மூத்த உறுப்பினர் அமரர் தோழர் கோன் நினைவாக லண்டனில் வசிக்கும் தோழர் நாகராஜா அவர்களின் பங்களிப்பில் நடைபெற்றுவரும் இவ் நிகழ்வுகள் எமது கழகத்திற்கு பெருமையளிக்கிறது.  1983 காலபகுதியில் தோழர் கோன் கழகத்துடன் இணைந்து எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் அளப்பெரியது. பெற்ற தாயை அநாதை இல்லங்களில் சேர்க்கும் இக் காலத்தில் தோழர் நாகராஜாவின் உதவிகள் எமது மாணவர்களுக்கு சொல்லில் அடங்காத உதவிகள். இவ்வாறு சமூகபணியில் கிளிநொச்சி, வன்னி என பல பகுதிகளில் சேவையாற்றும் தோழர் நாகராஜா குடும்பத்தார் சீரும் சிறப்புற்று வாழ வாழ்த்தினார், இதனை சிறப்புடன் பயன்படுத்தி மாணவர்கள் சமூகத்தில் தலைநிமிர வாழ்த்துகளையும் கூறினார். சிறப்புவிருந்தினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் உரையாற்றும்போது,
இன்றைய விழாவின் சிறப்பு விருந்தினர் எமது புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய யாழ் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் எமது வன்னி மாவட்டத்தில் இரண்டு தடைவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய சேவைகளே இன்றும் எம் கண்முன் நகரெங்கும் காட்சியளிக்கிறது, அந்த காலபகுதியில் வவுனியா நகரசபையில் எமது அமைப்பே ஆளும் கட்சியாக இருந்தது. குறிப்பாக வவுனியா வைத்தியசாலையின் கட்டிடங்கள்,வன்னியின் அறிவொளியாய் திகழும் பொதுநூலகம், மைதானங்கள், பெரியாரின் சிலைகள் இப்படியே சொல்லிக்கொண்டு போக முடியும். இன்று 10 வருடங்கள் கடந்தும் அவையே நகரெங்கும் அபிவிருத்திபோல் காட்சியளிக்கிறது. எனினும் இன்று மக்கள் சேவைகளை மறந்ததன் காரணமாக இப்படிப்பட்ட வன்னிமண் பெருமைகாத்த இவரை யாழ் மண் பெற்று சிறப்படைகிறது. இந்த பாடசாலையில் இவ்வளவு மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் எனில் அதற்கு காரணமும் இவர் தலைமையிலான எமது அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட திருநாவற்குள குடியேற்றமே காரணம். இனிவரும் காலங்களில் எமது மாணவ செல்வங்கள் கிடைக்கும் உதவிகளை நன்றாக பயன்படுத்தி வளம்பெற வேண்டுமென வாழ்த்தினார். கௌரவ விருந்தினர் திருவருள்நேசன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று ஒரு மாபெரும் சேவகன் உங்கள் பாடசாலைக்கு வருகை தந்தது நல்லதோர் வரப்பிரசாதம், எதற்காக இவ்வாறு கூறுகிறேன் எனில் பலர் அறிந்த ஒன்றுதான் யாழ் கல்வியல் கல்லூரிக்கு பெரு நிலப்பரப்பை அன்பளிப்பு செய்து எமது கல்வித்தூணை தலைநிமிர்த்திய பெருமை கௌரவ தர்மலிங்கம் சித்தர்த்தன் அவர்களையே சாரும் என தெரிவித்தார்.

 

தொல்புரம் சக்தி முன்பள்ளி சிறுவர் விளையாட்டுப் போட்டி-

யாழ். தொல்புரம் மத்திய சனசமூக நிலையத்தின் சக்தி முன்பள்ளியின் 2014ம் ஆண்டுக்கான சிறுவர் விளையாட்டுப் போட்டிகள் தொல்புரம் பொக்கனை விளையாட்டு மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் ச.சதீஸ்வரன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் ஆற்றிய உரை,
இன்று நாம் ஒரு மாறிவரும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இவ் நிலையில் எமது இனம் பல சவால்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. காலம் காலமாக நாம் காத்துவந்த பல பண்பாட்டு அம்சங்கள் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் எமது இனத்தினுடைய இருப்பு கேள்விக்கு உள்ளாக நேரிடலாம். இந் நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றுவது காலத்தினுடைய கட்டாயம் ஆகும். இன்று எமது கைகளுக்கு கட்டுப்பட்டு நிற்கின்ற இந்த சிறார்களே நாளைய எமது சமுதாயத்தின் தூண்கள் இவர்களை நாம் சரியாக வழிநடத்த தவறும் சந்தர்ப்பத்தில் இவர்கள் தவறான பாதையைநோக்கி திரும்பப்படலாம். Read more

தொல்புரம் அம்பாள் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்டப் போட்டி-

karapanthatta pottikarapanthaatta pottiயாழ்ப்பாணம், தொல்புரம் அம்பாள் விளையாட்டுக்கழகம் கடந்த 31.03.2014 திங்கட்கிழமை அன்று மாலை உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் மாலைநேர கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை ஆரம்பித்தது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களும் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன்;, இரு அணியைச் சேர்ந்த வீரர்களுக்கும் கைலாகு கொடுத்து விளையாட்டுப் போட்டியினை ஆரம்பித்து வைத்தனர்.

ஜெனீவா தீர்மானத்தை அரசு ஏற்க வேண்டும்-முஸ்லிம் காங்கிரஸ்-

muslim congressஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீர்மானத்திக்கு முகம்கொடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்கவ்வச் செய்ய முடியும் என கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம்சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் எனவும், குற்றச்சாட்டுகளை தைரியமாக எதிர்கொண்டு அக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச் சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுளளார்.

வலிமேற்கு பிரதேச சபையில் சர்வதேச நீர் தினம்-

neer thinamஉலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன்; வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் வலி மேற்கு பிரதேச சபையில் எதிர்வரும் 08.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று சர்வதேச நீர் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந் நிகழ்வில் உலக தரிசன நிறுவனப் பணிப்பாளர் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சமுதாய மருத்துவ துறையின் தலைவர் வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமார், யாழ். பல்கலைக்கழக புவியியல்துஐற பேரசிரியர் கலாநிதி இ.இராஜேஸ்வரன், யாழ். பல்கலைக்கழக புவிவியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி பிரதீபா விபுலன், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.பிரதீபராஜா, பொதுசுகாதார பரிசோதகர் ப.சோளன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 26 பேர் கைது-

unnamed2சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 26 இலங்கைத் தமிழர்களை அந்தமான் கரையோரத்திற்கு அப்பால் கைதுசெய்த இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினர், அவர்களை இலங்கைக்கு இன்றுகாலை திருப்பி அனுப்பியுள்ளனர். மேற்படி 26பேரும் அந்தமான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்பின் அந்தமான் பொலிஸார் இவர்களை விமானம்மூலம் இலங்கைக்கு அனுப்பிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 26 இலங்கையர்களுடன் பயணித்த இப்படகை 02 நாட்களுக்கு முன் ரோந்தில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்புப் பிரிவினர் இடைமறித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் இலங்கைக்கு உணவு மானியம் வழங்கியது-

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 203 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவு மானியத்தை வழங்கியுள்ளது. உலகு உணவுத் திட்டத்தின்கீழ் இந்த மானியம் வழங்கப்பட்டிருப்பதாக ஜப்பானிய தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை உணவுத் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த மானியம் ஜப்பானினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொதி செய்யப்பட்ட மீன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடல் வள பாதுகாப்பு கூட்டம்-

கடல்வள பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தொடர் ஒன்று அமெரிக்க நிவ்யோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் இடம்பெற்று வருகிறது. சர்வதேச கடல்வள மீளுருவாகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான சர்வதேச பொறிமுறை ஒன்றை ஆராயும் பொருட்டு, இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இக் கூட்டத்துக்கான இணை தலைமை உறுப்பினராக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன செயற்படுகின்றார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயம்-

Ranilஅமெரிக்கா மெசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்காக தாம் அங்கு செல்லவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான அழைப்பிதழ் தமக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், மனித உரிமைகள் மாநாடு நிறைவடையும் வரை மேற்கத்தைய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளாதிருப்பதற்கு தாம் தீர்மானித்து இருந்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியும்-

por kuttramபோர்குற்றம் புரியப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றுக்கு இலங்கையை அழைத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிய அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் இலங்கைமீது அவதானத்தை அதிகரிக்க வேண்டும் என, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகத்தின் தலைவர் ஹெலீனா கெனடி தெரிவித்துள்ளார். இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் Read more

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு வரவேற்பு-

action against hungerமனித உரிமை மீறப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக பிரான்ஸின் அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு முன்னர் மூதூரில் தமது தன்னார்வத் தொண்டர்கள் 17 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவமும் மனித உரிமை மீறல்களில் உள்ளடங்குவதாக அரச சார்பற்ற அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், அதேபோன்று எமது அமைப்பும் அடைந்த வெற்றியாகும் என நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சர்ஜே பிரெய்சியை மேற்கோள்காட்டி ரொய்டர் தெரிவித்துள்ளது. நாம் நியாயம் கோரி ஏழு வருடங்களாக செயற்பட்டோம். இறுதியில் எமது சகோதரர்களின் மரணம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை கிடைத்துள்ளது. அதன்மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்பதே அந்த செய்தியாகும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்- பான் கீ மூன்-

இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கியத்துவம் குறித்து கூடிய கவனம் செலுத்தியுள்ளளேன். இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், பொறுப்புக்கூறல் என்ற விடயம் அவசியமான ஒன்றாகும். ஜெனீவா யோசனைக்கு மதிப்பளித்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை இலங்கை வழங்க வேண்டும் என பான் கீ மூன் கோரிக்கை விடுத்திருப்பதாக ஐ.நா செயலர் பான் கீ மூனின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இன்னும் 82 கிலோமீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள்-

2c82 சதுர கிலோமீற்றர் பரப்பிலேயே வடக்கில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளன விரைவில் அவையும் அகற்றப்பட்டுவிடும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கண்ணிவெடி அகற்ற வேண்டிய 2004 சதுர கிலோமீற்றரில் 82சதுர கிலோமீற்றரே எஞ்சியுள்ளது. அதுவும் வனப்பகுதியாகும். கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஒத்துழைப்பு கிடைக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில், மக்களை மீள்குடியேற்றக்கூடிய சகல பகுதிகளிலும் நிலகண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இதன்படி கண்ணிவெடி அகற்றும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோரது குடும்பங்களுக்கு ஆலோசனை-

missing personsவடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதன் பொருட்டு, குறித்த தரப்பினருடன் தற்போது பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஆணைக்குவின் செயலர் எம். டபிள்யூ. குணதாச கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

singapore forign ministerசிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. சண்முகம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை வரும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இரட்டை வரிவிதிப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

15 வருடங்களின் பின் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம்-

cTBமட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து சுமார் 15 வருடங்களின் பின்னர் கொழும்பிற்கான நேரடி இரவுநேர பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பஸ் சேவை இலங்கை போக்குவரத்து சபையினால் நேற்றிரவு 8.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாசிக்குடாவிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் நன்மை கருதியே இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை பொது முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகத்திற்கு நிதியுதவி-

aikkiya natsaththira (1) aikkiya natsaththira (3) aikkiya natsaththira (5)வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் மைதான புனரமைப்பு மற்றும் ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழக நடவடிக்கைகளுக்காக புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் தலைவரிடம் ரூபா 35,000 பெறுமதியான காசோலை நேற்று அன்பளிப்பு செய்யபட்டது. இந் நிகழ்வு நேற்றுமாலை கோவில்குளம் இளைஞர் கழக அலுவலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் திரு.சேகர், கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எம்.கண்ணதாசன், ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ், நிகேதன் செல்வம், அகிலன், சசி, பாலா, நவநீதன், சுகந்தன் ஆகியோரும், ரொக்கற் விளையாட்டு கழகத்தின் தலைவர் செல்வம், செயலாளர் மோகன், ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத் தலைவர் பிரசாத் உட்பட கழகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஜோன்சன், தயாபரன், டிலச்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு புத்தகப் பைகள் அன்பளிப்பு-

kalaivani munpalli (5)kalaivani munpalli (6)kalaivani munpalli (3)kalaivani munpalli (4)மாணவர்களின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் அதீத அக்கறையுடன் செயல்படும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் மற்றுமொரு செயற்திட்டமாக கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகர் திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு ஒருதொகை புத்தகப் பைகள் கடந்த 28.03.2014 வெள்ளிக்கிழமை அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள், ஆரம்ப கல்வியின் மூலமே சிறந்த கல்விமான்களாக உருவாக முடியும். எனவே மாணவர்களும், மாணவர்களின் ஆரம்பக் கல்வியில் பெற்றோர்களும் அக்கறையுடன் செயல்பட வேண்டும். எமது வன்னி பிரதேசத்தில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டுவரும் கோவில்குளம் இளைஞர் கழகம் தொடர்ந்தும் அதன் செயற்பாடுகளை விஸ்தரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார். இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கண்ணதாசன், காண்டீபன், சதீஸ் மற்றும் நிகேதன், சாந்தசோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவி எஸ்.பவனாதேவி, முன்பள்ளி ஆசிரியை என்.குமுதினி மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரேரணையை நிறைவேற்ற இலங்கை முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்-

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டமை சரியானதே என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரேரணை முன்வைக்கப்பட்டமை குறித்து பிரித்தானிய பாராளுமன்றிக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலர் வில்லியம் ஹேக் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தீர்மானம் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்யும் நோக்கில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்தும் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கும். தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் சுயாதீன கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது. மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன்மூலம் இலங்கைக்கு மிக வலுவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து இன மக்களினதும் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது என வில்லியம் ஹக் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை, அமெரிக்கா இடையே இராணுவ பயிற்சி செயலமர்வு-

usnslஇலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி செயலமர்வு இன்று கொழும்பில் ஆரம்பமானது. 9 நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கூட்டு இராணுவப் பயிற்சி செயலமர்வை, அமெரிக்காவின் பசுபிக் வலயத்திற்கான கட்டளைத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் இந்தப் பயிற்சி செயலமர்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இப் பயிற்சி செயலமர்வில் முப்படையைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 21பேரும் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களைத் தவிர, அமெரிக்க உத்தியோகத்தர்கள் 21 பேரும், மேலும் 15 நாடுகளைச் சேர்ந்த 26பேரும் இதில் பங்கேற்பரென இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கோபி உள்ளிட்ட குழுவை கைதுசெய்ய விசேட குழு-

gopiபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்டவர்களை கைதுசெய்ய மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலதிக பொலிஸ் குழு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி பொலிஸார் பொதுமக்களிடம் கோரி வருகின்றனர். அரச விரோத துண்டுப்பிரசுரம் விநியோகம் தொடர்பில் கோபிமீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்பி அதற்கு தலைமை வகிப்பதற்கு கோபி உள்ளிட்ட குழுவினர் முனைவதாக அரசாங்கம் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலிஸாருக்கு எதிராக 815 முறைப்பாடுகள் பதிவு-

கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிரான 815 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது, இவற்றுள் பொதுமக்கள் சமர்ப்பித்த 557 முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் டீ.எம்.பீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்திய 0710361010 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிஸாரினால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் முறையிடுவதற்காகவே, இந்தத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 206 எழுத்துமூல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விரிவான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.பீ தென்னக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அவுஸ்திரேலிய கடற்படை படகுகள் வழங்கிவைப்பு-

australaia boatஇலங்கையின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இரண்டு கடற்படைப் படகுகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களில் ஒன்று அண்மையில் அவுஸ்ரேலிய தூதரக அதிகாரியினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அவுஸ்ரேலிய கடற்பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, இலங்கை கடற்படைத் தளபதி ஜயந்த கொலம்பகே மற்றும் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின்போது அவுஸ்ரேலிய பிரதமர் டோனி அபர்ட் இலங்கை அரசாங்கத்திற்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்த கப்பல் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சமன் சிகாரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம்-

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகாரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக நியமனம் பெற்றுள்ளார். சட்டம் மற்றும் ஒழுங்கமைச்சினால் இலங்கையில் 99பேர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவராக சமன் சிகேரா உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படி ஜனவரி 01ம் திகதி முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் உட்பட 15 அமைப்புக்களுக்கு தடை-

புலிகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 15 பங்கரவாத இயக்கங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டுவந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில் அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373மூலமாக இந்நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலையடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்ப்பித்த இந்ந பிரேரணைக்கு வெளிநாடுகளிலிருந்து தீவிரவாத அமைப்புக்களை தடைசெய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் இலங்கை அரசாங்கமானது அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கும் புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்யவுள்ளதாக அறிவித்தது. இதில் நியூயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;, கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப் புலிகள் அமைப்பு, விநாயகமூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும் புலிகள் இயக்கத்துடன் 15 மேலதிக இயக்கங்களும் தடைசெய்யப்படவுள்ளன அவையாவன Read more