Header image alt text

சிறைக்கைதிகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு-

ethir katshiyai ilakkuஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில், சிறைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான கெபே தெரிவித்துள்ளது. மாத்தறை, கம்புறுபிட்டியவில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கான, மேடை நிர்மாணம் மற்றும் அலங்கார பணிகளுக்காக காலி சிறைச்சாலையைச் சேர்ந்த 44 சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்கு நீல நிற காற்சட்டை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கெபே குறிப்பிட்டுள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியாவார். அவர், கொமியுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரே. இந்நிலையில், கம்புறுபிட்டியவில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டத்துக்காக சிறைச்சாலையின் வாத்தியக்குழு, சிறைச்சாலை பஸ், சிறைச்சாலைக்குச் சொந்தமான கொடிக் கம்பங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன என கபே சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சிறைச்சாலை கைதிகள் ஈடுப்படுத்தப்பட்டுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பும் கூறியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 6ஆவது நிபுணர் நியமனம்-

anaiகாணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்கு, மற்றுமொரு சர்வதேச நிபுணரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார். முன்னாள் சர்வதேச நீதிபதியும் ஜப்பானைச் சேர்ந்தவருமான மொடூ நோகுச்சி என்பவரே ஆறாவது நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலைத்தேய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 6 நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்மென்ட் டி சில்வா, ஜோவெரி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன், அவ்தாஷ் கௌஷால் அஹ்மிர் பில்லாஹ் சூவ்பி மற்றும் நீதிபதி மொடூ நோகுச்சி ஆகியோரே இந்த அறுவர் ஆவர். இந்த ஆணைக்குழு, கடந்த 2004ஆம் ஆண்டு சட்ட அம்சங்கள் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாகாணசபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அரசுடன் இணைவு-

tissaஐக்கிய தேசியக்கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினரான ஜனக்க திஸ்ஸ குட்டியாராச்சி இன்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்காகவே இவர் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார். இதனையடுத்து, இன்று முற்பகல் அலரிமாளிக்கைக்குச் சென்ற இவர், தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துக்களை மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்ததுடன், ஜனாதிபதியின் வெற்றிக்காக பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளார். கடந்த மாகாண சபை தேர்தலின்போது, திஸ்ஸ குட்டியாராச்சி 18,265 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்-

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்றையதினம் நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் உறவினர்களும், மீனவ சங்கங்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் விடுதலையின் பொருட்டு பலசுற்று பேச்சுவார்த்தைகள், இலங்கை அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றிருந்த போதிலும் எந்த முன்னேற்றமும் இது வரையில் ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நிறைவு பெற்றதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்-

busகட்டுநாயக்க – கொழும்பு வீதி அதிசொகுசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுகாலை தொடக்கம் வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் பஸ்கள் எவரிவத்த பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கின்றன. எனவே சொகுசு பஸ்களுக்கும் விமான நிலைய வளாகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 5 லட்சம் பேர் தகுதி-

தபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவத்தாட்சி அலுவலகம் ஊடாக அரச நிறுவனங்களுக்கு வாக்காள் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரின் பதவிகள் பறிப்பு-

nuvereliaநுவரெலியா பிரதேச சபையில் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவரின் பதவி பறிபோவதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்ட ராமையா மலர்வாசகம், கதிர்வேல் கல்யாணகுமார் ஆகியோரின் பதவி பறிபோவதாக தேர்தல் ஆணையாளர் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளாரென அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி தாவிய இவ்விருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததாகவும் வழக்கின் முடிவு கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குழுவிற்கு சாதகமாக அமைந்துள்ளதெனவும் லோரன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள இரண்டு பிரதேசசபை உறுப்பினர்களுக்கு பதிலாக காளிமுத்து பரமசிவம், அருணாசலம் நல்லமுத்து ஆகிய இருவரையும் நியமிக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது என செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் இதுவரை இல்லை – மாவை சேனாதிராஜா

mavaiஇலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா வன்னி இன் விருத்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சியின் செயற்குழு நிகழச்சி நிரலின் அடிப்படையில் இன்றைய அரசியல் நிலை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஏனைய விடயங்களையும் கலந்துரையாடடி இருந்தோம். பல மாவட்டங்களிலும் இருந்து வந்த எமது உறுப்பினர்களின் அபிவிப்பிராயங்கள் எம்மால் கோரப்பட்டு கருத்து ஆராயும் கூட்டமாக இடம்பெற்றிருந்தது. இதன்போது அவர்களது கருத்துக்கள் ஒருமித்ததாக இருந்தது. ஆனால் அந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு தீர்மானமாக எடுக்கவில்லை. எங்களுடைய இந்த கருத்துக்களை ஒருமித்து தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு ஆராய்ந்து பொருத்தமான சிபாரிசை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு கொடுக்கும். தமிழ் தேசியக்கூட்டமைப்புதான் உரிய நேரத்தில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கும் . இதன்போது ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளீகளா? என கேட்டபோது, நாம் அவ்வாறான ஒப்பந்தங்களை செய்யவில்லை என்பதனை திட்டவட்டமாக சொல்ல விரும்புகின்றேன் என தெரிவித்திருந்தார். இதன்போது மறைமுகமாக தமிழ் தேயக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றவர்கள் மைத்திரிபாலவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என கேட்டபோது, அவ்வாறு யாரும் பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னதாக இல்லை. ஆனால் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தைதான் அவர்கள் வெளிப்படுத்தியதாக அறிகின்றோம். இன்றைய கூட்டத்திலும் எல்லோரும் வாக்களிப்பதற்கு வற்புறுத்தவேண்டும் என்ற கருத்தும் தரப்பட்டுள்ளது. அது மட்டுமே தற்போதைக்கு உள்ள கருத்தாக இருக்கும். கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சம்பந்தனின் இந்திய விஜயம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதாக இருக்குமா? என கேட்டபோது, இது பரிதாபகரமான நிலை. அவர் ஏற்கனவே செய்து கொண்ட சத்திரசிக்கசைக்காக வருடாந்தம் சிக்சிச்சை பெற மருத்துவர் கூறியதற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளார். மாறாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டில்லி சென்று பேச வேண்டிய தேவை தற்போதைக்கு ஏற்பட வில்லை. அவர் மிக விரைவாக வந்துவிடுவார் என தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான தீர்மானம் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் பா. உ சீ.யோகேஸ்வரன்

yogesதமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள யோகேஸ்வரன், ராமேஸ்வரத்தில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போது எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தெரிவித்த கருத்து. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள். வேட்பாளர்கள் தங்களது தேர்தல் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டதன் பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களை புறக்கணிக்காது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வட மாகாண சபையின் முதலமைச்சர் அதிகாரமற்ற நிலையில் ஆட்சி நடத்தி வருகின்றார், அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தமிழ் மக்கள் தொடர்ந்தும் உரிமைகளுக்காக போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் – சுசில் பிரேமஜயந்த

mahinda-maithriஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில்; இணைந்து கொண்டவர்களின் வாக்குகளை கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவுவார் என சிலர் தப்புக் கணக்கு போடுவதாகவும் ஆளும் கட்சியிலிருந்து விலகியவர்களின் வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவின் கணக்கில் சேர்க்க முடியாது. சில ஊடகங்களின் எதிர்வுகூறல் பிழையானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவே கடந்த காலங்களில் செயற்பட்டுள்ளதாகவும் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் எதிராகவே செயற்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரணில்

imagesCAV8YTCBதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நாட்டின் சாதாரண சட்டங்களுக்கு அமைய சட்ட நடவடிக்கை ஐக்கிய தேசியக் கட்சி எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்   இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய புலனாய்வுத் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனை விசாரணை செய்ய அண்மையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் சர்வதேச காவல்துறையினரின் உதவியை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – பிரித்தானியா

imagesCAD2KKY8தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருந்தது. ஐரோப்பிய நீதிமன்றின் தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு தடைப் பட்டியலிலிருந்து புலிகள் இயக்கம் நீக்கப்பட்டது. எனினும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்மானம் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய தடை உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளுர் சட்டங்களின் அடிப்படையில் தடை தொடர்பான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 மாம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை கிழக்கிலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு

wellயாழ். தெல்லிப்பழை கிழக்கு சிற்றியம்புளியடி கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், தெரிவித்தார். குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய்ப் படலம் காணப்படுவதாக அப் பகுதி கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனை அடுத்து 13.02.14 சனிக்கிழமை சுகாதார பரிசோதகர், சுகாதார தொண்டர்களுடன் சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம். இப்பகுதியில் குடிநீர் வழங்குவதற்காக வலி. வடக்கு பிரதேச சபைக்கு அறிவித்துள்ளோம். அத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

uma munpazhliதிருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஒளிவிழா நிகழ்வு 12.12.2014 காலை தொடக்கம் கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் திருமதி கே.மீரா தலைமையில் நடைபெற்றது. (இவ் முன்பள்ளியானது 1995 ஆம் ஆண்டு அமரர் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டது.) இந்நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள்  நகரபிதாவும், வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன்(விசு) பிரதம விருந்தினராகவும் மேலும் இந் நிகழ்வில் முன்னாள் உப நகரபிதாவும் புளொட்டின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சிறப்பு விருந்தினராக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு எஸ்.கோணேஸ்வரலிங்கம்  அவர்களும், கௌரவ விருந்தினர்களாக  செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு.ஜெகதீஸ்வரன்(சிவம் புளொட்;), புளொட் உறுப்பினர் முத்தையா கண்ணதாசன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு பா.பாலேந்திரன், திருநாவற்குள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி திருமதி.சோ.நகுலேஸ்வரம்பிள்ளை, ஆசிரியர் ரகுபதி,  கிராம அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளர் சர்மா, மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், கிராமச்சங்க உறுப்பினர்களும் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர்  மழலைகளின் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் புளொட் சமூக ஆர்வலர் தோழர். திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களின் அனுசரணையில் பெற்றோர் தின மற்றும் ஒழி விழா நடைபெற்றது       இவ் நிகழ்வில் மழலைகளின் கலை நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. எமது தேசத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளான காவடி, கரகாட்டம் மற்றும் பாடல்கள், சிறப்பு பேச்சுக்கள் என பல நிகழ்வுகளுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி .லிங்கநாதன் தனதுரையில்.- திருநாவற்குளம் கிராமமானது 1990 ஆண்டு இடம்பெயர்ந்து வந்த எமது மக்களை த.ம.வி. கழகத்தினராகிய நாம் குடியேற்றிய கிராமமாகும். இது போன்று பல கிராமங்கள் த.ம.வி.கழத்தினராகிய எம்மால் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கிராம மக்களுக்கு நாம் பல வழிகளிலும் அபிவிருத்தி உதவிகளை செய்தபோதும் காணி தொடர்பான தீர்வினை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை, விரைவில் வடமாகாண முதலமைச்சர் அவர்களையும் ஏனைய அமைச்சர்களையும் இப்பகுதிக்கு வரவழைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்படும் எனவும் கூறினார். மேலும் கூறுகையில் இக்கிராம மக்களின், சிறார்களின் வளர்ச்சிக்காக 2015 ஆண்டு மாகாணசபை நிதியில் இம் மண்டபத் திருத்தத்திற்காக ரூபா 200000.00 நிதியும் உமாமகேஸ்வரன் முன்பள்ளிக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் மேலும் திருநாவற்குள விளையாட்டு மைதானத்தினை நவீனரக விளையாட்டு மைதானமாகவும், இப் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றினையும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்ததோடு. எமது விடுதலை போராட்டத்தில் இணைந்து தமதுயிரை, அவயவங்களை, உடமைகளை இழந்த  எமது கழக மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொள்வதற்காக உமாமகேஸ்வரன் நற்பணி மன்றம் ஒன்றை உருவாக்கி உள்ளுர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் எமது தோழர்கள், நலன்வரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் உதவிகளை பெற்று விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்,

uma munpazhli00 uma munpazhli0 uma munpazhli1 uma munpazhli2 uma munpazhli3 uma munpazhli4 uma munpazhli5 uma munpazhli6 uma munpazhli7 uma munpazhli08 uma munpazhli8 uma munpazhli9 uma munpazhli11 uma munpazhli12 uma munpazhli13 uma munpazhli14 uma munpazhli15 uma munpazhli16 uma munpazhli17 uma munpazhli18 uma munpazhli19 uma munpazhli20 uma munpazhli21 uma munpazhli22 uma munpazhli23 uma munpazhli24 uma munpazhli25 uma munpazhli26 uma munpazhli27 uma munpazhli28 uma munpazhli29 uma munpazhli30. uma munpazhli30 uma munpazhli31 uma munpazhli32 uma munpazhli33 uma munpazhli34 uma munpazhli35 uma munpazhli36 uma munpazhli37 uma munpazhli38 uma munpazhli39 uma munpazhli40 uma munpazhli41 uma munpazhli42 uma munpazhli43 uma munpazhli44 uma munpazhli45

 

  
Achipuram2கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் (புளொட்) ஜி.ரி.லிங்கநாதனால் ஆச்சிபுரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து 07 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு ரூபா 35000.00 பெறுமதியான கூரைத்தகடுகள் அவற்றுக்கான ஆணிகள் ஆகியவற்றை வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் பிரமான அடிப்படையிலான 2014 நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இவ் உதவியை நல்கிய வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கூறுகையில் உங்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு இத்தகரங்கள் வழங்கப்படகின்றன, இதனை சரியான முறையில் பாவிப்பதன் மூலம் நீண்டகாலம் பயன்படுத்ததக்கதாக இருக்கும் என்பதோடு தொடர்ந்தும் இனம் காணப்பட்ட  மக்களுக்கு 2015 ஆண்டு நிதியில் இவ்வாறான உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு. ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்களும் கலந்துகொண்டார்.

Achipuram Achipuram1 Achipuram2 Achipuram3 Achipuram4 Achipuram5

v.hospitel3வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு வைத்திய நிலையப் பகுதியினை (06.12.2014) கௌரவ வட மாகாணசபை முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார். இவ் நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றகையில் வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்தசுத்திகரிப்பு நிலையமானது இம் மாவட்ட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வாகும். ஏனெனில் தற்போது இவ் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் சென்று வரவேண்டியுள்ளது இனிவரும் காலங்களில் வவுனியா வைத்தியசாலையில் இச்சிகிச்சையை அவர்கள் மேற்கொள்ளமுடியும். மேலும்,  வவுனியா வைத்தியசாலையின் முன்பாக உள்ள கட்டிடம் புளொட் அமைப்பின் தலைவர் கௌரவ சித்தார்த்தன் அவர்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரின் வேண்டுகோளுக்கமைவாக சுகாதார அமைச்சராக இருந்த திரு.பௌசி அவர்களினால் கட்டப்பட்டதாகும் எனகுறிப்பிட்டார். தொடர்ந்து தனதுரையில் கிராமபுற வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி, வளப்பற்றக்குறைகளையும் தீர்க்கப்படும் பட்சத்தில் கிராமப்புற மக்களும் தமது வைத்திய சேவையை இலகுவாக பெற்றுக கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவே இச்சந்தர்ப்பத்தில் கௌரவ முதலமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோரிடம் எனது கோரிக்கையை மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன் என்றார்.

v.hospitelv.hospitel1v.hospitel2

 

மஹிந்த ராஜபக்ஷவின், முதலாவது பிரசாரக் கூட்டம், அநுராதபுரத்தில்

mr03mr06எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின், முதலாவது பிரசாரக் கூட்டம், அநுராதபுரத்தில் சல்காது மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி
அரசாங்க தரப்பிலிருந்து எவரையேனும் எதிர்க்கட்சிக்கு எடுத்தால், அங்கிருந்து எவரையேனும் நானும் எடுப்பேன். நான் நினைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் எடுப்பேன். அதற்கு ஒருகோப்பை தேநீரே போதுமானது. திஸ்ஸ அத்தநாயக்கவை எடுக்கவும் ஒரு கோப்பை தேநீரே தேவைப்பட்டது என்று தெரிவித்தார்.
தொடர்ந்தும் எங்களுடைய தரப்பிலுள்ளோரை எடுப்போம் என்று கூறி மக்களைக் குழப்ப வேண்டாம்’ என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார்.
யுத்தம் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு தம்மிடம் கடிதம் மூலமாக கோரியிருந்ததார்கள். எமது படையினர் எந்தவொரு சிவிலியனையும் படுகொலை செய்யவில்லை. யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் படையினரை ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த சிலர் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறார்கள்.
2005ம் ஆண்டு முதல் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுளன தொடர்ந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் துணை பொது செயலாளரான உதய கமன்பில ராஜபக்ஷவுக்கு ஆதரவு

Chambicஜாதிக ஹெல உறுமயவின் துணை பொது செயலாளரான உதய கமன்பில ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகுவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முடிவு மிகவும் கவலையுடன் எடுக்கப்பட்ட ஒன்றாகும். கட்சி ஆரம்பிக்கப்பட்டு 15 வருட காலமாக விசுவாசமாக இருந்த எனக்கு மைத்திரிபால வெற்றி பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுக்க வேண்டி ஏற்பட்டது. நான் கட்சியை மிகவும் நேசிக்கின்றேன். ஆனால் அதைவிடவும் தாய் நாட்டை நேசிக்கின்றேன். ஹெல உறுமயவுக்கு எனக் கொள்கைகள் உள்ளன. நாங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் சில திருத்தங்களையே செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தோம். ஆனால், பொது எதிரணி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 100 நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக கைச்சாத்திட்டார். இதேவேளை, அங்கு 3 மணித்தியாலங்களின் பின்னர் ஹெல உறுமயவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முறையில் திருத்தங்களை செய்வதாக கைச்சாத்திட்டார். இவர் யாரை ஏமாற்றப்பபோகிறார்? ஐ.தே.கவையா? அல்லது ஹெல உறுமயவையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  தேர்தல் முடிந்து இவர்கள் எவ்வாறு ஸ்திரமான அரசை நிறுவப்போகிறார்கள். இவர்களால் 100 நாட்களில் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் போலி நாடகமே. தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் நாடு துண்டு துண்டாக சிதறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாங்கள் முதலில் அரசிலிருந்து வெளியேறி, பௌத்த அமைப்புகள் ஒன்றினைந்து 3 ஆவது ஜனாதிபதி வேட்பாளரை தேர்தலில் நிறுத்தவே தீர்மானித்தோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. எனினும், எனக்கு பொது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பதில் எந்தவித உடன்பாடும் இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடம் ஏறினால் நாட்டில் மக்கள் ஆட்சி இல்லாமல் போய் தமிழீழம் உருவாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளது. ஏனெனில் இந்த எதிர்க் கட்சிக் கூட்டணியில் இருப்பவர்கள் மேற்குலக நாடுகளின் முகவர்கள். இதனால் தற்போதுள்ள அரசை பாதுகாக்க வேண்டியது இலங்கையர் என்ற வகையில் எனது பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர வெளிநாடுக்கு சென்றுள்ளார்.

Hirunika_CIமேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த, முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி, ‘எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்துகொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வார்’ என தெரிவித்தார்.

அத்துருகிரியவில் விமான விபத்து நால்வர் மரணம்  

auuuஇன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ரஷ்ஷியாவின் தயாரிப்பான அன்ரனொவ் -32 என்ற வகையை சேர்ந்த விமானம் கட்டுநாயக்கவிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் தொடர்பை தாம் இழந்ததாகவும் அத்துரகிரியவில் இறப்பர் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும். இந்த இறப்பர் தோட்டத்தில் நான்கு வீடுகள் அமைந்துள்ள நிலையில், ஒரு வீட்டின் கூரை இதன்போது சேதமடைந்துள்ளது.  இதன்போது நான்கு பேர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ள  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காட்சித் தெளிவின்மை இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாமென்று சிவில் விமான போக்குவரத்துச்சபை தெரிவித்துள்ளது.

 மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அது சர்வதேசத்தின் வெற்றி

Mahinda-Maithri-03‘எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால் அது அவருக்கான அல்லது நாட்டுக்கான வெற்றியாக அமையாது. அது சர்வதேசத்;தின் வெற்றியாகவே அமையும்’. ‘யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் அழித்து துடைத்தெறிந்த ஜனாதிபதியை சர்வதேசம் இன்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதற்கு முட்பட்டு வருகின்றது. நாடு அபிவிருத்தி பாதையில் செல்லும் இத்தருணத்தில் பல சதிமுயற்சிகளும் நாட்டை சர்வதேசத்துக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன’ விவசாயிகளுக்கான வரட்சி நிவாரண காசோலைகளை வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் வியாழக்கிழமை(11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.- Read more

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இன்றுபோல் அன்று எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை- சந்திரிக்கா

Maithribalaநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இன்றைக்கு கிடைத்திருக்கும் ஆதரவு அன்றைக்கு எனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க அவ்வாறு கிடைத்திருந்தால் அதை அன்றே நீக்கியிருப்பேன்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே எனது ஒற்றை கண்ணை தான் இழந்தேன். அத்துடன் இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வந்துள்ளது அன்று அவ்வாறு யாரும் ஒத்துழைக்கவில்லை. அவ்வாறு ஒரு இணக்கமான சூழல் வாய்த்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தை அன்றே ஒழித்திருப்பேன். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. எனக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தால் ஆபத்து நேரும் என்று அறிந்திருந்திருந்தேன். நான் அன்று அவ்வாறு நினைத்தது இன்று நடந்துகொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய சந்திரிக்கா பண்டார நாயக்கா இன்றைய சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து இதனை செய்து முடிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள் – சீ.பி.ரட்ணாயக்க 

untitledஇந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள். அந்த வெற்றியில் மலையக மக்களும் பங்காளிகளாக இருப்பார்கள் என்பதில் எவ்வித ஜயமுமில்லை என சிறீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் தனியார் போக்குவரத்து துறை அமைச்சருமான சீ.பி.ரட்ணாயக்க நுவரெலியா மாவட்ட வலப்பனை தேர்தல் தொகுதிக்காக இராகலை நகரில் தேர்தல் காரியாலயத்தை வியாழக்கிழமை(11)  திறந்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில்;- இன்று எமது நாட்டின் அபிவிருத்தியை பார்க்கின்றபொழுது எந்த ஒரு சக்தியாலும் ஜனாதிபதியை வெற்றி கொள்ள முடியாது. அந்த அபிவிருத்தி சமமாக மலையகத்திற்கும் வந்தடைந்துள்ளது. ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் அந்த நாட்டில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். கடந்த 10 வருடங்களில் அந்த அபிவிருத்தி சிறப்பாகவுள்ளது. அதுவும், மலையக மக்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அவர்களின் பாதைகளும் இன்னும் பல அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் ஜனாதிபதி வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் நின்று, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். எமது நாடு சுதந்திரம் அடைந்த பின்பு அபிவிருத்தியில் பாரிய மைல்கல்களை எட்டியுள்ளது என்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இயங்கும் இந்த அரசாங்கத்தில்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. பல சர்வதேச நாடுகள் எமக்கு எதிராக செயல்பட்ட பொழுதிலும் அந்த சவால்களை முறியடித்து அபிவிருத்தி  பாதையில் இந்த நாட்டை கொண்டு செல்லக்கூடிய அனைத்து திறமைகளும் மஹிந்தவுக்கே உண்டு என அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தை நிறுத்தாமல்விட்டிருந்தால் தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள்- கருணா

imagesCAUUEEZSயுத்தத்தை அப்போது தான் நிறுத்தாமல் விட்டிருந்தால், இப்போதுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள் என்று ‘திவிநெகும’ திணைக்களத்தின் ‘செழிப்பான இல்லம்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பயனாளிகள் வீடுகளை  திருத்துவதற்கான  2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு  வழங்கும் நிகழ்வு, திக்கோடை கணேச வித்தியாலயத்தில் புதன்கிழமை(10) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். ‘2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை  நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும்,  Read more

இரு இலங்கை மலையக தமிழ்க் கட்சிகள் எதிரணியில் இணைகின்றன

diga-rada_CIஎதிரணியில் இணைந்த திகாம்பரம் இலங்கையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான இரு மலையக அரசியல் கட்சிகள் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளே அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளன.. மலையக மக்கள் முன்னனியின் அரசியல் பிரிவு தலைவரான வீ. இராதகிருஷ்னன் தான் வகித்து வந்த தாவரவியல் மற்றும் பொது பொழுது போக்கு துணை அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். மற்றுமோர் அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான பி. திகாம்பரமும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் பதவிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தமது பதவி விலகல் கடிதங்களை குறித்த இருவரும் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டு வீ. இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். இ.தொ. கா தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து இரு வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய அவர் மலையக மக்கள் முன்னணியில் இணைந்திருந்தார். அதே தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று பி. திகாம்பரமும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த போதிலும் பின்னர் அவர் அரசாங்க தரப்பில் இணைந்து கொண்டார். இந்த இருவரும் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இடம் பெற்றிருந்த அவருடனான சந்திப்புகளில் இணக்கம் தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்காவிடம் முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்படும் – மைத்திரி

Maithraiதாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியில் சந்திரிக்காவை அமர்த்தப் போவதாகவும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் கொள்கைகளுக்கும் மட்டுமே கட்டுப்பட போவதாகவும் எவரும் தம்மை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கணனி மோசடிகள் இடம்பெறவில்லை எனவும், தேர்தல் ஆணையாளர் மீது பூரண நம்பிக்கை இருப்பதாகவும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவினால் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளும் என்ற அச்சம் கிடையாது. நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியும் எனவும். படையினர் மீது பூரண நம்பிக்கை இருப்பதாகவும் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தம்பசிட்டி சனசமூக நிலையத்திற்கு வட மாகாணசபை நிதியினூடாக தளபாட உதவி-

09யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட்டின் நோர்வே கிளை அமைப்பாளர் திரு. இராசசிங்கம் சிவராசா (ராஜன்) ஆகியோரும், தம்பசிட்டி கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ப.சிவசுப்பிரமணியம் அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய நிர்வாகத்தினரும், ஊர்ப்பெரியார் எஸ். ஆறுமுகம் அவர்களும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது கிராமத்தின் அபிவிருத்தி பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், நீர், நில வளங்களை உரியமுறையில் பயன்படுத்துதல், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பின்போது புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து சுமார் 75,000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்கள் மற்றும் நூல்களை உரிய முறையில் பராமரிப்பதற்கான பெட்டகம் உள்ளிட்ட பொருட்கள் மேற்படி சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்டது. மேற்படி தளபாடங்களை சனசமூக நிலையத் தலைவர் திரு. ப.சிவசுப்பிரமணியம் அவர்கள் உட்பட சனசமூக நிலைய நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.

0102030504060708