Header image alt text

இன்று உலக அகதிகள் தினம்-

refugeesஉலக அகதிகள் தினம் ஆண்டு தோறும் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவு கூறப்பட்ட நிலையில், அதனையே சர்வதேச அகதிகள் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டின் உள்ளும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சமுகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி உலக அகதிகள் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் காரணமாக, இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இலங்கை அகதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் உள்நாட்டிலும் போர், சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில், இன்னமும்கூட பல முகாம்களில் வசித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புலிகளின் வலையமைப்பு தொடர்ந்து இயங்கி வருகின்றது-அமெரிக்கா-

Fபுலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டுக்கான சர்வதேச தீவிரவாத அறிக்கையை அமெரிக்கா நேற்று வெளியிட்டிருந்தது. இதில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குகிறது. அவர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தின்போது இலங்கை பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. எனினும் புதிய அரசாங்கம் குறித்த சட்டத்தை தளர்த்துவதாக உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதேவேளை இந்தியாவிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜப்பானிய பிரதமர் சந்திப்பு-

mangalaவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவை ரோக்கியோவில் சந்தித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின் வெளிவிவகார அமைச்சர் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், மங்கள சமரவீர இவ் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவர் ரோக்கியோவில் இன்று நடைபெறும் மாநாடு ஒன்றிலும் பங்கேற்கிறார். இதேவேளை, இலங்கைமீது முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், தனித்துவமான விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜப்பானிய இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், விரைவில் உள்நாட்டு பொறிமுறை அமுலாக்கப்படவுள்ளது. இந்த பொறிமுறைக்கு சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும். எனினும் இலங்கையின் தனித்துவமான நடைமுறைகளின் ஊடாக இந்த விசாரணைகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் பயணித்த வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentபதுளை மாவட்டம் பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 01.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த 09 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஒன்று பயணித்த வாகனம் பசறை – புத்தளம் வீதியின் 14ம் கட்டைப் பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மின்சார ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை-

wreereவெயாங்கொடையில் இருந்து பாணந்துறை வரையில் மின்சார ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையானது ரயில்வே திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு என்பவற்றின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 160 ரயில் பெட்டிகளையும் 18 பவர் செட் ரயில்களையும் 30 டாங்கர்களையும் கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது எனவும் அசர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை-இந்தியா இடையே பாலம் அமைக்கும் விடயம்-

ajith pereraஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைப்பது குறித்த உத்தியோக பேச்சுவார்த்தைகள் எவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையில் பாலம் மற்றும் கடலுக்கு அடியிலான சுரங்க வழிபாதை என்பவற்றை உள்ளடக்கி இந்த பாதை நிர்மாணிக்கப்படவிருப்பதாக, இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்திருந்தார். எனினும் இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் தங்களுடன் உத்தியோபூர்வமாக எதனையும் பேசவில்லை. பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜோ இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போதும், இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கைது-

airportஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீண்டநாள் மீன்பிடிப் படகின் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த இருவரே நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த 16 இலங்கையர்களில் இருவர் அங்கிருந்து நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிலாபம் மற்றும் உடப்பு பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

போலி விசாவுடன் யாழ். இளைஞர் கைது-

arrest (2)போலி விசாவைப் பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே போலி விசாவின் மூலம் கனடா செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த இளைஞர் ஜப்பான் ஊடாக கனடா செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான இளைஞரிமிருந்து நெதர்லாந்திற்குப் பயணமாவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த போலி விசா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டி-

UNP (2)எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கட்சியின் ஊடக பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அத்துடன், இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தின்போது மேலும் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சபையை தெரிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளது என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே கட்சியின் மத்திய குழு கூடுவது என்றும் இன்றைய மத்திய குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது என கட்சியின் ஊடக பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

சீனாவில் தங்கியிருப்பது குறைக்கப்படும்-வெளிவிவகார அமைச்சர்-

mangalaசீனாவில் சார்ந்திருக்கும் வெளிநாட்டு கொள்கையை இலங்கை மதிப்பாய்வு செய்யவும் ஏனைய நாடுகளுடனான உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று தெரிவித்தார். சீனா உட்பட சகல நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் சம நிலையான இராஜதந்திரக் கொள்கைகளை இலங்கை முன்னெடுக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, என்எச்கே வேல்ட் நியூஸ_க்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2009இல் இலங்கைக்கு உதவி வழங்குவதில் சீனா, ஜப்பானை முந்தியிருந்தது என அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அரசாங்கத்தின் கீழ் ஊழல்கள் அதிகம் காணப்பட்டமைக்கு சீன உதவி வழிவகுத்தது. கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தை இலங்கை நிறுத்தி வைத்து, அதனை மதிப்பாய்வு செய்து வருகின்றது. இந்த செயற்றிட்டம் சரியான செயன்முறைகளை கடைப்படித்ததா என்பது கேள்விக்குறியாகும் என அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

metஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்ளுதல், பயிற்சிகளுக்காக இணைந்துகொள்ளும் பாதுகாப்பு பிரிவினரின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரித்துகொளடளல், கடல்வழி பாதுகாப்பில் இருநாடுகளும் நடந்துகொள்ளும் முறைமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உணவு விஷமானதால் 144 பேர் பாதிப்பு-

hospitalஉணவு விசமடைந்ததன் காரணமாக கட்டுநாயக்க பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 144 ஊழியர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர். திடீர் சுகவீனமுற்றவர்களில் 61 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலை உணவு உட்கொண்டதன் பின்னர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சுகவீனமுற்றுள்ளனர். சுகவீனமுற்ற 144பேரும் இராகம, மினுவங்கொட சீதுவ வைத்தியசாலைகளில் அனுமதித்ததன் பின்னர் சிலர் சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளனர்.

காவற்துறை அதிகாரிகள் தரமுயர்வு-

policeபிரதி காவல்துறை அதிகாரிகள் இருவர், சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபராக உயர்வு பெற்றுள்ளனர். இதன்படி, தற்போது நிதி குற்ற விசாரணை பிரிவில் பணிப்புரியும் பிரதி காவல்துறை அதிகாரி ரவி வைத்தியலங்கார மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்தில் பணிபுரிந்த பிரதி காவல்துறை அதிகாரி டி.டபிள்யூ. செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்னர். இதற்கு இன்று அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சருடன் இணைந்து பயணிக்கத் தயார்-மாவை-

mavaiவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதிராஜாவினால் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Read more

யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு, 36 பேருக்கு பிணை-

courtsயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைதான 36 பேருக்குப் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 36 சந்தேகநபர்களும் யாழ். நீதிமன்றத்தில் இன்று (ஆஜர்படுத்தப்பட்டபோது, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாக இரு வழக்குகள் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. யாழ்.சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய வழக்கின் சந்தேகநபர்களையும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. பொலிஸ் காவலரண்மீது தாக்குதல் நடத்திய பிறிதொரு வழக்கின் சந்தேகநபர்களும் 5 லட்சம் ரூபா இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பிணையாளிகளும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சந்தேக நபர்கள் பிறிதொரு வழக்கில் கைசெய்யப்பட்டால் குறித்த பிணை ரத்துச் செய்யப்படும் எனவும் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கன் விமானசேவை விமானத்தில் பாதிப்பு-

sri lankan airlinesபிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்குள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சம்பவத்தின்போது குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 ஊழியர்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். வளிமண்டலத்தில் காணப்பட்ட மந்தநிலை காரணமாக விமானம் குழுங்கியதால் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று அதிகாலை 5.21 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அதன்பின்னர், விமானத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்கள், விமான நிலைய வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். ஏனைய நால்வரும், மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு வேட்பு மனு கிடையாது-அமைச்சர் ராஜித்த-

rajithaஎதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம்பெறப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்ததாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதேநேரம், பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் இல்லையென்றும் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார் என அமைச்சர் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார்.

வன்செயல்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸ் சைக்கிள் ரோந்து-

cycleயாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை தடுக்கும் வகையில் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சைக்கிள் ரோந்து சேவையை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஆரம்பித்து வைத்தார். குறித்த சேவையினூடாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாகவும், போதைப் பொருட்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிப்பவர்களை மறைமுகமாக கண்டுபிடிக்கவும், சட்டவிரோத மதுபான விற்பனை போன்றவற்றுடன் முக்கியமாக வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு மற்றும் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்பவர்களை கண்காணிக்கவும் இது குறித்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான பொலிஸாரின் சைக்கிள் ரோந்து சேவை மக்களுக்கு மட்டுமல்லாது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாணவர்கள் தமது கல்வியை இடையூறு இல்லாமல் தொடர்வதற்கு வழிவகுக்கும் எனவும் பொறுப்பதிகாரி வூட்லர் தெரிவித்துள்ளார்.

வலளாய் மக்கள் மின்சாரமின்றி சிரமம்-

electricity 01யாழ். வலிகாமம் கிழக்கு வலளாய் பிரதேச மக்கள் தங்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் 113 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுள்; 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது தற்காலிக கொட்டில் அமைந்து தங்கியுள்ளனர். எனினும் மின்சார வசதி இல்hமையால் இரவு நேரங்களில் அச்சத்துடன் பொழுதை கழிக்கவேண்டியிருப்பதாக முறையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால மகிந்த சந்திப்புக்கு ஏற்பாடு-

Mahinda-Maithri-03ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் பிறிதொரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்பொருட்டு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விசேட குழு சந்திக்கவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மைத்திரி மகிந்த இணக்கப்பாட்டுக்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது. இதன்படி, அந்த குழுவினர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளது. இச்சந்திப்பின் போது, எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலவையும், மகிந்த ராஜபக்ஸவையும் மீண்டும் சந்திக்க வைப்பது பற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை – இந்திய மீனவர்கள் கூண்டு மீன்பிடித் திட்டம்-

fishஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர்கள் கூண்டு மீன்பிடி வளர்ப்பு முறையை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வாகவே, கூண்டு மீன்பிடி முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதற்கமைய, ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவர்களுக்கு தமிழக அரசு 90வீத மானியத்தில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக 10 மீனவர்கள் தெரிவுசெய்யப்பட்டு 20 கூண்டுகளில் மீன்பிடிக்க தமிழக அரசினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தங்கச்சி மடம் பகுதியிலுள்ள அந்தோனியார்புரம் கடற்கரையில் மூன்று கூண்டுகள் அமைக்கப்பட்டு, 5,000 மீன்குஞ்சுகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்டு, வளர்ப்புக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலிமுகத்திடல் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு-

openகாலிமுகத்திடலின் புதிய சுற்றுவட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்திற் கொண்டு இந்த சுற்றுவட்ட பாதை குறிப்பிட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. புதிய சுற்றுவட்டம் நீர் அலங்காரம் மற்றும் மின் விளக்கு அலங்காரங்களால் அலங்கரிக்கப்ப்ட்டுள்ளதுடன் இவை இரவு நேரத்தில் ஒளிரவிடப்படவுள்ளது. இலங்கையின் அடையாளத்திற்கு இதுவும் ஒரு சின்னமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவு-

land slideமலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலையகத்தில் அவ்வப்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பல வீதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்துடன் மக்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன. இன்றுகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. மழை பெய்து வருவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு டிக்கோய நகர சபையினரும் ஹட்டன் பொலிசாரும் கேட்டுள்ளனர்.

வடக்கில் மூடப்பட்ட இராணுவ முகாங்கள் பற்றிய தகவல்-

sl army2015 ஜனவரிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் எவ்வித இராணுவ முகாம்களும் மூடப்படவில்லை எனஇராணுவம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்குப் பின் வடக்கில் 59 இராணுவ முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவலை இராணுவ தலைமையகம் முற்றாக நிராகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் வடக்கின் நிலைமைகளை கருத்திற்கொண்டு படையினர் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு வந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி கீழ் தேவை ஏற்பட்ட சிறிய முகாம்கள் சில மூடப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு 07 முகாம்களும், 2010ஆம் ஆண்டு 09 முகாம்களும், 2011ஆம் ஆண்டு 04 முகாம்களும், 2013இல் 17 முகாம்களும், 2014ஆம் ஆண்டு 24 முகாம்களும் மொத்தமாக 59 சிறிய முகாம்கள் மூடப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழில் போதைப்பொருள் வைத்திருந்த மாணவர்கள் மடக்கிப் பிடிப்பு-

arrest (2)யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் நால்வர் மாவா என்ற போதைப் பொருளை வைத்திருந்த குற்றசாட்டில் அவர்கள் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று காலை கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மாவா என்ற போதைப் பொருளை பாடசாலையில் வைத்திருந்த 4 மாணவர்கள் தொடர்பில் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளுக்கு இரகசியமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் போதைப் பொருளை பாடசாலைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர்களை மடக்கி பிடித்த அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

வலி மேற்கில் விவசாயிகளுக்கு கருத்தமர்வு-

ainkaranயாழ். வலி மேற்கு பிரதேசத்திலுள்ள விவசாய சம்மேளனப் பிரதிதிநிதிகளுக்கான கருத்தமர்வு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் வேள்விசன் (சங்கானை) அனுசரனையுடன் வலி மேற்கு பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை நீர்ச் சபையின் இரசாயனப் பகுதி பணிப்பாளர் திரு.க.சரவணணன், யாழ் பல்கலைக்கழக சமூதாய மருத்துவத்துறைத் தலைவர் வைத்தியகலாநிதி. ச.சுரேஸ்குமார், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி. கைலேஸ்வரன் மற்றும் வேள்விசன் (சங்கானை) அபிவிருத்தி ஊக்குவிப்பாளர் தி.பிரியவக்சலன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

Read more

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு-

sri lanka (4)புதிய தேர்தல் முறைமைக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது மேலதிக வர்த்தமானியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன் தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களை அச்சிடும் பணிகள் இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 237 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. புதிய திருத்தத்தின் ஊடாக விருப்பு வாக்கு முறைமை நீக்கப்படவுள்ளது. தொகுதி மற்றும் விகிதாசார முறைமைக்கு அமைய பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை, இந்தியா தரைவழி மார்க்கத்தால் இணைக்க விருப்பம்-

ssfdஇலங்கையையும் இந்தியாவையும் தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார். மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 23 ஆயிரம் கோடி இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29கிலோமீற்றர்) இணைப்பது எனக் கூறிய அவர் இது இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழால் சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்படுவதாக கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த முனையும் அரசு-ஞானசார தேரர்-

 gnanasaraபுலம்­பெயர் தமி­ழர்களின் சர்­வ­தேச மா நாடு ஒன்றை கொழும்பில் நடத்த வெளி­வி­வ­கார அமைச்சு எடுத்­துள்ள தீர்­மா­னத்தை பாராட்டும் அதே­வேளை வடக்­கு கி­ழக்கு உட்­பட அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் எமது இரா­ணுவ வீரர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போடும் நட­வ­டிக் ­கை­களை நாம் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ளப் போவது இல்லை என பொது­பல சேனாவின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். புலம்­பெயர் தமி­ழர்­களை மட்டும் சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வதில் இந்த அரசு மும்­மு­ர­மாக செயற்­ப­டு­வ­தனை தவிர்த்து எமது பல்­லா­யிரக்கணக்­கான இரா­ணுவ வீரர்­களின் உயிர் தியா­கங்­களின் அர்ப்­ப­ணிப்­பினால் கிடைக்­கப்­பெற்ற தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த தவ­றி­வி­டக்­கூ­டாது எனவும் சுட்­டி­காட்­டினார். கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள பொது­பல சேனா பௌத்த அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு அதன் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்றுஇடம் பெற்­றது. இதன்போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கட்டாய திருமணப் பட்டியலில் இலங்கை-

454545பிரித்தானியாவில் குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களில் கட்டாயத் திருமணம் செய்யும் நாடுகளின் முதல் 10 பட்டியலில் இலங்கை, ஆறாம் இடத்தை வகிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. குறித்த ஆய்வை மேற்கோள்காட்டி, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவை அடுத்து ஆறாம் இடத்தில் இலங்கை உள்ளதாகவும் காட்டாயத் திருமணமானது பிரித்தானியாவில் தண்டணைக்குரிய குற்றமெனவும் என்.டீ.டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பாக்கிஸ்தான் 38.3 சதவீதத்துடன் முதலாமிடத்தையும் இந்தியா 7.8 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும் பங்களாதேஷ் 7.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும் சோமாலியா 1.6 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் இலங்கை 1.1 சதவீதத்துடன் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன. அத்துடன், துருக்கி 1.1 சதவீதத்துடன் ஏழாம் இடத்தையும் ஈரான் 1 சதவீதத்துடன் எட்டாமிடத்தையும் மற்றும் ஈராக் 0.7 சதவீதத்துடன் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை விமானப்படை தளபதி சந்தித்தார்-

4655விமானப்படை தளபதியாக பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்ட எயார் மார்ஷல் ககன புளத்சிங்கள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையிலேயே விமானப்படை தளபதி, ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். எயார் மார்ஷல் ககன புளத்சிங்கள, இலங்கையின் 15ஆவது விமானப்படை தளபதியாக பதவிகளை பொறுப்பேற்று கொண்டதை நினைவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்துள்ளார்.

சஜீன்வாஸின் விளக்கமறியல் நீடிப்பு, திஸ்ஸவிடம் விசாரணை-

sachin vasstissa atanaikeவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று அவரது வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதவான் இவரது பிணை கோரிய மனுவை நிராகரித்ததுடன், அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு சென்றுள்ளார். முற்பகல் 10மணியளவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்ற திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு தபால் விநியோகத்தில் பாதிப்பு-

postபதிவு தபால் விநியோக நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருமளவிலான பதிவு தபால்கள் குவிந்து கிடப்பதே இதற்கு காரணமாகும். பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற பதிவு தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கிக்னறனர். இது தொடர்பாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறுகையில், ஊழியர்கள் பற்றாக்குறையே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மேலதிக தபால் ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பழைய முறையிலேயே நடைபெற வேண்டும்-நலின்-

UNP (2)கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச ஊழல் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார். பொலிஸ் நிதி மோடிச விசாரணை பிரிவு பிரதமரின் பழிவாங்கும் இயந்திரம் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் விசாரணை முன்னேற்றம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 20வது திருத்தச் சட்டத்தை உடன் நிறைவேற்றி பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் எதிர்வரும் தேர்தல் பழைய முறைபடியே நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 255ஆக உயர்த்த ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாதெனவும் நலின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

மொஹான் பீரிஸிற்கு எதிரான மனு வாபஸ்-

mohan perisமுன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள மனுதாரர் தீர்மானித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் குறித்து முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளதால் மனுதாரர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதாகவும் அவருக்கு எதிரான மனுவை ஜூலை 27ம் திகதி மீளப் பெற்றுக்கொள்வதாகவும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

போதைவஸ்து வாள்வெட்டுக்களை தடுத்து நிறுத்துமாறு சுவரொட்டி மூலம் கோரிக்கை- புளொட்டின் ஏற்பாட்டில் வடக்கு முழுவதும் பிரச்சாரம்-

fhgபோதைவஸ்து வாள்வெட்டு போன்ற சம்பவங்களை உடன் தடுத்து நிறுத்துமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) கோரிக்கை விடுத்துள்ளது.

புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் 31ஆவது நாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில்….
*அரசே, மாணவி வித்தியாவின் விடயத்தில் உடன் நீதியை நிலைநாட்டு!
*அரசே, போதைவஸ்து, வாள்வெட்டுக்களை உடன் தடுத்து நிறுத்து!!
*அரசே, மக்களை அச்சத்திலிருந்து விடுவித்து நிம்மதியாக வாழவிடு!!!
போன்ற வாக்கியங்கள் காணப்படுகின்றன.

குறித்த சுவரொட்டிகள் வடக்கு மாகாணம் முழுவதும் அரச அலுவலகங்களுக்கு முன்பாகவும், பொதுமக்கள் கூடும் சந்தை, வணக்க ஸ்தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு முன்பாக என்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
நன்றி, யாழ். தினக்குரல் 16.06.2015.

Read more

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி கைமாறப்பட்டது என்ற செய்தியில் உண்மை இல்லை-

mavaiதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி கைமாறப்பட்டது என்ற செய்தியில் உண்மை இல்லை. அந்த செய்திக்கு பதில் அளிக்கும் ஊடக அறிக்கை ஒன்றினையும் விரைவில் வெளியிடவுள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் யாழ்.மார்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெற்குக்கு அழைக்கப்பட்டு பாரிய நிதி கைமாறப்பட்டதாக சில பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டு உள்ளன 

Read more

சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-(படங்கள் இணைப்பு)

888யாழ். பறாளாய் வீதி சுழிபுரம், நாவலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு முன்பள்ளியின் தலைவரது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிய சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. Read more

நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்-ஐ.நா மனித உரிமை ஆணையாளர்-

al hussainஇலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹ_சைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என செய்ட் அல் ஹ_சைன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை-

vasமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான லலித் ஜயசூரிய, குசலா சரோஜின் மற்றும் அமேந்திர சேனாரத்ன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழுவே இன்று இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது. ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன் பிணை நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரகசிய பொலிஸ_க்கு சமூகமளிக்கவேண்டும். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய ஐவரும் மேற்குறிப்பட்ட பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம் அதிகரிப்பு-

saudi head cutசவுதி அரேபியாவானது சிரிய நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கும், தனது நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் தலையை வெட்டி நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இவ்வருடத்தில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருட எண்ணிக்கையான 90ஐ மிஞ்சியுள்ளது. சிரியாவைச் சேர்ந்த இஸ்மாஹெல் அல்-தவ்ம் என்ற நபர் தடைசெய்யப்பட்ட எம்பெடமைன் வில்லைகளை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று தலைவெட்டி கொலைசெய்யப்பட்டார். சவுதியில் மரணதண்டனை அதிகளவில் நிறைவேற்றப்படுகின்றமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டில் அந்நாட்டில் 192 பேருக்கு தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அந்நாட்டில் வருடமொன்றில் நிறைவேற்றப்பட்ட அதிகப்படியான மரணதண்டனை எண்ணிக்கையாக உள்ளது. குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு தம்பக்க நியாயத்தை தெளிவுபடுத்த ஒழுங்காக வாய்ப்பு வழங்கப்படுவதில்லையென நீண்டநாட்களாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சவுதியின் நீதித்துறையின் செயற்பாடுகள்மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுதவிர சவுதி அரேபியாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுதல், ஒன்று கூடுதலுக்கான உரிமை மறுக்கப்படுதல், விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீதான கெடுபிடிகள் போன்றவற்றுக்கும் பல அமைப்புகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுதல்-

ravinatha ariyasingheஇலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடானது ஒரு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்போர் நாட்டில் இருந்து செல்வதற்கான ஆயத்தங்களை செய்யும் காலக்கட்டத்தில் ஒரு குறுகிய காலத்துக்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்றும் ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார். குடியேறிகள் தொடர்பான ஐ.நாவின் விசேட நிபுணர் பிரான்ஸிஸ் க்ரீபே அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கே இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் கூறும்போது ரவிநாத் ஆரியசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐ.நாவின் விசேட நிபுணர் தமது குற்றச்சாட்டில் இலங்கையில் வீசா ஒழுங்கு மீறல் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார். எனவே சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பிரச்சினை, குற்றமாக கருதப்படாது அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படவேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இதற்கு நேற்று ஜெனீவா நிகழ்வில் பதிலளித்துள்ள ரவிநாத் ஆரியசிங்க, சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனினும் அவர்கள் நாட்டிலிருந்து அனுப்பப்படும் வரை அவர்களின் பாதுகாப்பு கருதியே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியின் இலங்கை விஜயம்-

barack-obama_0அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான அரசாங்கத்தின் அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரென தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்தின் நல்லாட்சியை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவில்லையென்றும், பல நாடுகள் அரசாங்கத்துடன் எந்த விதமான தொடர்பாடுகளையும் கொண்டிருக்கவில்லையென்றும் எதிர்க்கட்சி அரசின் மீது குற்றம் சுமத்துகிறது. ஆனால் இக்குற்றச் சாட்டுக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது. கடந்த ஆட்சியாளர்கள்தான் சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையை தனிமைப்படுத்தியிருந்தனர். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் வெளிநாடுகளுடனான நட்புறவு மேம்பட்டுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வருட இறுதியில் இலங்கை வருகின்றார். இதற்கான இலங்கை அரசின் அழைப்பை ஒபாமா ஏற்றுள்ளார். இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஒபாமா மட்டுமல்ல பல சர்வதேச தலைவர்கள் இலங்கை வருவதற்காக வரிசையில் நிற்கின்றனர். எமது அரசையும் நல்லாட்சியையும் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால்தான் உலகின் மத்தியில் எமது நாடு இன்று தலை நிமிர்ந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வலி மேற்கு சத்தியக்காட்டு வீதி திருத்தும் பணிகள்-

valiயாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக பழுதiடைந்த நிலையில் இருந்த சத்தியகாட்டு வீதி வலி மேற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீடு ரூபா.1000000 பணத்தில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மிக நீண்ட காலமாக மேற்படி வீதியைத் திருத்துவது தொடர்பில் பிரதேச மக்களால் கேரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபை உத்தியோகஸ்தர்களுடன் சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறித்த வீதியின் திருத்தவேலைகளை நேரில் பார்வையிட்டார்.

பசில் ராஜபக்ச பிணையில் விடுதலை-

basilமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணைகள் நான்கிலும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிணையாளர்கள் இருவரும் அரசாங்க ஊழியராக இருக்கவேண்டும் என்பதுடன் அந்த பிணையாளர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க, திவிநெகும வங்கியின் முன்னாள் தலைர் பி.பீ. திகலக்கசிறி ஆகியோரும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திவிநெகும திணைக்களத்தின் நிதியை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களை 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி-

jaffna courtsகடந்த மே 13ஆம் திகதி வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் பயங்கரவாதக் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று அனுமதித்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவியின் தாயார், சகோதரர், சட்ட வைத்திய அதிகாரி, புலனாய்வு அதிகாரி, ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் சாட்சியமளித்தனர். கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை பொலிஸார், மன்றில் இன்று சமர்ப்பித்தனர். அவற்றை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், இந்தக் கொலை வழக்குடன் தொடர்புபட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்ய நீதவான் அனுமதி வழங்கினார். இன்றைய வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்திருந்த மாணவியின் தாய் மற்றும் சகோதரர் மன்றிலேயே மயங்கி வீழ்ந்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்-

flightஉலகின் பெரிய விமானமான யு-380 ரக விமானம், இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவது இது, இரண்டாவது தடவையாகும் என்பதுடன் பகல் பொழுதில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணி, சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் தரையிறங்கிய போது அதில் 300 பயணிகள் இருந்துள்ளனர். குறித்த விமானம் டுபாயில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த நிலையில் இவ்வாறு தரையிக்கப்பட்டது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு-

sarath fonsekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி உயர் நீதிமன்றில் சேனக டி சில்வா மனு தாக்கல் செய்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கிய காரணத்தினால் பாராளுமன்ற உறுப்புரிமையை மீள வழங்குமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் இவ்வாறான மனுவொன்றை தாக்கல் செய்ய சேனக்க டி சில்வாவிற்கு எவ்வித சட்ட அதிகாரமும் இல்லை என சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து குறித்த மனு உயர் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

டி.வி.உபுல் பிணையில் விடுதலை-

upulதென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிரும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் மஹிந்த ஆட்சியில் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும் என டி.வி.உபுல் பகிரங்க மேடையில் கருத்து வெளியிட்டார். இதுபற்றி அவரிடம் விசாரணை செய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு டி.வி.உபுலை கைது செய்ததுடன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைத்திருந்தது.

புதிய விமானப்படை தளபதி நியமனம்-

airforce commanderஎயார் வைஷ் மார்ஷல் ககன் புலஸ்தி புலத்சிங்ஹல புதிய விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய பாதுகாப்புப் பணிகளின் பிரதம அதிகாரியாக எயார் மார்ஷல் கோலித்த குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்றையதினம் இதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தமிழ் டயஸ்போராக்கள் இணைந்து செயற்பட விருப்பம் – மங்கள சமரவீர

mangalaபிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழர்கள் விருப்பம்: உலகத் தமிழர் பேரவையுடன் இடம்பெற்ற கலந்துடையாடல் இலங்கையில் தேசியத்தை கட்டியெழுப்ப உதவும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் சமூகத்தினரிடையே இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்த அவர்களுடன் கலந்துரையாட வேண்டியது அவசியம் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும். இலங்கை பிரஜைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு தமிழ் டயஸ்போராக்களுடன் கலந்துரையாடி அவர்களை ஈர்ப்பதும் முக்கியம் என்றும் பெரும்பான்மையான தமிழ் டயஸ்போராக்கள் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம்

childrenசிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினம் யூன் 12 ம் திகதி ஆகும். அந்தவகையில்  இன்று  காலை ஞாயிற்றுக்கிழமை வட்டகொடை நகரத்தில்  பிரிடோ நிறுவன வழிக்காட்டலில் இயங்கும் சிறுவர் கழக உறுப்பினர்கள் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 இற்கு மேற்ப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் தலவாக்கலை பூண்டுலொயாவிலிருந்து பேரணியாக வட்டக்கொடை தோட்டம் வரை சென்றனர். இதன் போது சிறுவர்கள் வித்தியாவின்  கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதுடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடுக்குமாறு கோரியும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான  பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துக்கொண்டனர். இதேவேளை மற்றுமொரு பேரணி நானுஓயா பிரதான நகரத்தில் இன்று  காலை முன்பள்ளி ஆசிரியர்களின் ஏற்ப்பாட்டில் நடைப்பெற்றது. இப்பேரணியில் 150 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் நானுஓயா பொலிஸ் பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்  ரசிக்கா   கலந்து கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக  விளக்கம் கொடுத்தமை குறிப்பிடதக்கது.

வர்த்தகரின் மகனை கடத்தி கப்பம் பெற்றவர் கைது – வவுனியா

police ...வவுனியா பிரபல வர்த்தகரின் 5 வயது மகன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பாலர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனின் தந்தையிடம் 30 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் அத் தொகையை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் 10 இலட்சம் தருமாறு கடத்தப்பட்ட நபரினால் வர்த்தகரிடம் கோரப்பட்டிருந்தது. இதன் படி 10 இலட்சம் ரூபா குப்பை மேடொன்றில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறுவன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து வர்த்தகர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். உடனடியாக சிறந்த முறையில் செயற்பட்ட வவுனியா பொலிஸார் கடத்திய நபரை மறுநாள் கைது செய்ததுடன் விளக்கமறியலில் வைப்பதற்கு  நீதிமன்றத்தின் உத்தரவினை பெற்று விளக்கமறியலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறிப்பிட்ட சந்தேக நபர் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்பட்ட நிலையில் நிதி மோசடி தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது – வவுனியா

arrestவவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயகெனடி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;- பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் சிறுமிகள் மீது தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பூவரசன்குளம் பொலிஸாரிடம் அப்பகுதி மக்களும் தாய் சிறுவர் இல்ல அருட் சகோதரி ஒருவரும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். இதன் பிரகாரம் சமய பாடம் கற்பிற்கும் குறித்த ஆசிரியர் சில நாட்களாக தலைமறைவாக இருந்தார். எனினும் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐ.ம.சு.முன்னணிக்குள் பிளவு

upfaபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளை, புதிய தேர்தல் திருத்தம் அடங்கிய 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென கூட்டணியின் மற்றுமொரு சாரார் வலியுறுத்தியுள்ளதாலேயே இவ்வாறான கருத்து முரண்பாடுகள் வலுவடைந்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. Read more