யாழ். ஏழாலை கண்ணகை முன்பள்ளி சமூகத்தினர் நடாத்திய வருடாந்த விளையாட்டு விழா-2017 இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏழாலை கண்ணகை அம்பாள் தேவஸ்தான வளாகத்தில் திரு.த.திருஞானசம்பந்தர் (சமாதான நீதவான், தலைவர் அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தானம்) அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. உதயமோகன் (அதிபர், ஏழாலை மகாவித்தியாலயம்) ஆகியோரும்,
சிறப்பு விருந்தினர்களாக திருமதி ஜெயராசா வடிவாம்பிகை (முன்பள்ளி இணைப்பாளர், உடுவில் கோட்டம்), திருமதி தேவகி புவனேஸ்வரன் (அதிபர். ஏழாலை சைவ மகாஜன வித்தியாலயம்), திருமதி சசிகலா தினேஸ் (கிராம உத்தியோகத்தர் J/205), திரு. திலீபன் (Iland Friends Together), திரு. கா.சுந்தரலிங்கம் (அருள்மிகு கண்ணகை அம்பாள் தேவஸ்தான பூசகர்), திரு. வி.குணேஸ்வரன் (ஏழாலை கண்ணகை மத்திய சனசமூகநிலைய செயலாளர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்று முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
இதனையடுத்து போட்டிகளில் வெற்றியீட்டிய பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, முன்பள்ளி ஆசிரியை திருமதி தி.ராஜனி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன. இந்நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்ப் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.