தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே! கழகத்தோழர்களே! தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2017 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக. Read more