Header image alt text

school (2)முதலாம் தர அனுமதி தொடர்பில் மனித உரிமை மீறல்களில் மேற்கு, மத்தி மற்றும் தென் மாகாண பாடசாலைகள் பட்டியலின் உயர் நிலையில் உள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் குழுவின் தலைவி டொக்டர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும், இந்தப் பாடசாலைகளில் சிலவற்றுக்கு எதிராக, திரும்பத் திரும்ப முறைப்பாடுகள் கிடைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய மகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு எதிராக இவ்வருடம் மாத்திரம், 80 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். Read more

sfd (2)காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, இறப்புச்சான்றிதழ்கள், நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறையை, காணாமல் போனவர்களை மீட்பதில் காட்டவில்லை என்று, கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்;பட்ட தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி, 44ஆவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்துள்ளனர்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உரிய பதிலை, இந்த அரசாங்கம் வழங்கவேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வகைப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்’ எனக்கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 44ஆவது நாளாகவும் தொடர்ந்தது. Read more

amnesty internationalaகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை நேற்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்காகவே தாம் வருகை தந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் சலீல் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தமது உறவினர்களை இராணுவத்திடம் தாம் ஒப்படைத்ததாக மக்கள் தெரிவித்த போதும், அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என்பது சர்வதேச ரீதியில் ஓர் பாரதூரமான குற்றம் என சலீல் ஷெட்டி சுட்டிக்காட்டியுள்ளார். Read more

fishermen talksஇந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை, கொழும்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்திய அரசாங்கம் சார்பில், அந்நாட்டின் மீன்பிடித்துறை அமைச்சர் ராதா மொஹான் சிங் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, இலங்கைகைய பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். Read more

boatஇலங்கையர்கள், யேமன் நாட்டுப் பிரஜைகள், வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட சுமர் 480 பேருடன் மத்திய தரைக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த படகுகள் இரண்டு,

மனிதாபிமான சேவை அடிப்படையில், நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களில், பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் சிசு ஒன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

kachchatheevuஇந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை ஏற்க மறுக்கும் பட்சத்தில், கச்சைதீவு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக மீனவ சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீனவ சங்க தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இன்று இடம்பெற்றுள்ள மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தின் போது பேசியுள்ள மீனவசங்க தலைவர்கள், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், 1974 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் வலைகளை உலரவிடுவதற்கும், மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் அனுமதி அளிக்கும்படி கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். Read more

kattunaike airportகொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. Read more