Header image alt text

nyc23நல்லூர் பிரதேச இளைஞர் விளையாட்டு விழா-2017 நிகழ்வானது 29.05.2017 திங்கட்கிழமை மாலை 6.30மணியளவில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் திரு.ச.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

Read more

Mataraநாட்டின் தென்பகுதியில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட மழை, மண் சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாணவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இரத்தினபுரியில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஊவா மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. Read more

rajithaவெள்ள அனர்த்தம் ஏற்படும் முன்பே சில பகுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதும் சில குடும்பங்கள் வெளியேறாமல் இருந்தமையால் பலர் பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளனர். எனவே வரும் நாட்களில் அநாவசிய குடியிருப்புக்கள் அனைத்தையும் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். Read more

apkanஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

Vinayagamoorthy01.நேற்று முன்தினம் கொழும்பில் காலமான பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும், தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று யாழ். கொக்குவிலில் இடம்பெற்றது. அவரது பூதவுடல் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் நேற்றையதினம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துவரப்பட்டது. இன்று (30.05.2017) செவ்வாய்க்கிழமை காலை 7மணிமுதல் 8.30வரை சாவகச்சேரியில் அவரது பூதவுடல் அப்பிரதேச மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

Read more

P1430926சுன்னாகம், கந்ததோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு பூமாதேவி மகாதேவா ஞாபகார்த்த நினைவு மண்டபம் ஒன்று 25அடி அகலத்திலும் 60அடி நீளத்திலும் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (29.05.2017) திங்கட்கிழமை காலை 9.30மணியளவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் நடைபெற்றது. முதலாவது அடிக்கல்லினை நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவரும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நாட்டிவைத்தார். தொடர்ந்து ஸ்கந்தா பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர்களான சி.ஹரிகரன்,  த.தேவராஜன், சி.கஜன் மற்றும் சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் ந.தயாரூபன் மற்றும் சோதி மார்க்கண்டு ஆகியோர் நாட்டிவைத்தனர்

Read more

vinayakamoorthy_பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும் தமிழ் அரசியல்தலைவர்களில் ஒருவருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களது மறைவினால் துயருற்றிருக்கும் அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.

அன்பானவர், மிகவும் எளிமையானவர், முதிர்ந்த அரசியல்வாதி என்ற பண்புகளுக்கும் அப்பால் அவர் எமதினத்திற்கு ஆற்றிய கடினமான சேவைகளை இத்தருணத்தில் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். Read more

பட்டியல் 1         தீபம் குழு

tna (4)நமது மக்கள் பிரதிநிதிகள் எதற்காக பாராளுமன்றம் சென்றார்கள்?. குடும்பத்திற்காகவா? ஏழேழு பரம்பரைக்கும் சொத்து சேர்க்கவா? பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ளவா? பதவி, புகழ் ஆசையா? இல்லவே இல்லை. அப்படியானால்?

அவர்கள் பாராளுமன்றம் போனது, இனப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வை காண்பதற்கு. மக்களின்… அதாவது உங்களின் பிரச்சனைகளை பார்த்து பார்த்து தீர்த்து வைப்பதற்கு. வழக்கமாக இதைதானே அவர்கள் சொல்வார்கள்.
தேர்தல் மேடைகளில், ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் இனிக்க இனிக்க பேசும் நமது மக்கள் பிரதிநிதிகள் நிஜத்தில் எப்படியிருப்பார்கள்?. தேர்தல் மேடைகளில் ஏறி, இனத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என்பதை போல அடித்துவிடுபவர்… உங்கள் பிரச்சனைகளை என்னிடம் வந்து சொல்லுங்கள் என தியாகி உருவெடுப்பவர்கள், தேர்தலின் பின்னரும் அப்படியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

Read more

Balramவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளரும் இலங்கை வங்கி வெள்ளவத்தை கிளையின் முன்னாள் முகாமையாளருமான என்.பாலராமன் காலமானார்.
சுகவீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.

பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பூதவுடல்  வெள்ளவத்தை , ஈ.ஏ.கூரே மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிகிரியைகள் வியாழக்கிழமை நடைபெறும்.

vinayakamoorthy_தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் பகல் ஒரு மணியளவில் தனது 84 ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.