Header image alt text

DSC06993இந்திரராசா குடும்பத்தினருடைய இரண்டாவது இறுவெட்டு வெளியீட்டு விழா வட்டுவாகல் சப்தகன்னியர் கோவில் முன்றலில் வெட்டுவாய்க்கால் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வை முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் திரு கமலகாந்தன் தலைமை ஏற்று நடத்தினார் ஆரம்ப உரை சேதுபதியினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன் மற்றும் து.ரவிகரன், வன்னிமேம்பாட்டு பேரவை தலைவர் தவராசா, பூசகர் விநாயகமூர்த்தி, சப்தகன்னியர் கோவில் பூசகர் மற்றும் பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர்கள் மற்றும் திருமதி சாந்தி கமலகாந்தன் கலாச்சார பேரவை முல்லைத்தீவு மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். Read more

sds (2)யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இராணுவத்தினர் மூவரும் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ceylon-teachers-unionஅதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளதற்கு எதிராக எதிர்வரும் 24ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து அதிபர்களையும் கொழும்புக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

2009ம் ஆண்டு அதிபர்களாக நியமிக்கப்பட்ட சுமார் 4200 பேருக்கு இதுவரை பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். அத்துடன் சுமார் மேலும் 3000 அதிபர்களுக்கு நியமனம் வழங்க கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ssகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டு 4 நிரந்தர வீடுகளும் 6 தற்காலிக வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் திடீரென சுழல் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் மக்களது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுக் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள வாழை, பப்பாசி போன்ற பயன் தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. Read more

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.