Mataraநாட்டின் தென்பகுதியில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட மழை, மண் சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, மாத்தறை, அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தில் சிக்கியே அதிகளவு மாணவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதேநேரம் இரத்தினபுரியில் 30 ஆயிரம் மாணவர்கள் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஊவா மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, இயற்கை அனர்த்த்தில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி மரணங்களில் அறிவுறுத்தல்களையும் மீறி வேடிக்கை பார்க்கச்சென்றவர்கள் 18பேர் பலியாகியுள்ளதாகவும். வெள்ளம் வழிந்தோடிய இடங்களில் மரணமானவர்களின் உடலங்கள் கண்டெடுக்கப்படுவதாகவும் பலர் காணமல் போயுள்ளதாகவும் படையினர் தொடர்ந்தும் நிவாரண மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.