Header image alt text

1mai zhதோழமை உணர்வுள்ள சுவிஸ்  வாழ்  தமிழ்மக்களே! கழகத்தோழர்களே! தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!
   
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2017 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.   Read more

ssவடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் இன்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது வரையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தனித்தனியாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களது தனித்தனியான போராட்டங்களுக்கு அரசாங்கம் பதிழலிக்காத நிலையில் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து ஒர் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரிதிநிதிகள் இன்றைய குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

sdசட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, மியர்மார் பிரஜைகள் 30 பேர் மற்றும் இரு இந்தியர்களுமே, கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.

சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த இவர்களை, பத்திரமாக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். கைதானோரில் 9 சிறுவர்களும் அடங்குகின்றனர். மேலும், அகதிகளாக சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜைகள் இந்தியாவுக்கு சென்றுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லுத்தினல் கமாண்டர் சமிந்த வலாகுளுகே குறிப்பிட்டுள்ளார்.

sfd (2)நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராடி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 54ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டிக்க போவதாக அறிவித்துள்ளனர். உழைக்கும் வர்க்கமாகிய தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தினத்தை கருப்பு தினமாக கொண்டாடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.