Header image alt text

imagesமுல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும் என கூறியிருக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்க படையினர் கேட்கும் 5 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் வழங்கும் எனவும் மேலதிக காணி விடுவிப்பு தொடர்பில் 24ம் திகதி பேச்சுவார்தை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறப்பு விழாவுக்காக யாழ்.வந்த அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனிடம் கேப்பாவிலவு மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், கேப்பாபிலவு கிராமத்தில் படையினரிடம் உள்ள 399 ஏக்கர் நிலம் மக்களிடம் வழங்கப்படவுள்ளது. Read more

keppapula02கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து அந்நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றுடன் 43 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி வருகின்றனர்
மேலும், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் குறித்த முடிவை அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்க இன்று 11.04.2017 அவர்களை தமது போராட்ட இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். Read more