பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, விளக்கப்படுத்தியுள்ளார்.

“உயிர்த்த ஞாயித்து தாக்குதல்களுக்கு ஏதோவொரு வகையில் இவ்விரும் உதியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. அதனையடுத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என அமைச்சர் சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார்.

“இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்றார்.

இவ்விருவரையும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இன்று (24) அதிகாலை வேளையில் கைது செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.