 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொரலெஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும், வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (29) 1,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் 106,444 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 362 பேர் இன்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,445 ஆக அதிகரித்துள்ளது.
