ஜேர்மனி ludwigsburg இல் வதியும், இன்று (19.07.21) தனது அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜேர்மன் கிளை அமைப்பாளர் தோழர் நல்லதம்பி பவானந் அவர்களும், நேற்று (18.07.21) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அவரது மகளும் பல்கலைக்கழக மாணவியுமான பவானந்த் பௌர்ணியா ஆகியோரின் நிதியுதவியில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் வாழும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் ஒருவருக்கு மீன்பிடிக்கான வலைத்தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 30 ஆண்களும் 16 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 3,827 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மேலும் 980 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 285,912 பேராக அதிகரித்துள்ளது.
தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரியும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்களும் பரிசோதகர்களும், இன்று (19) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பாராமுகமாக செயங்படுவதாக, வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2021 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக` ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.