தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 06.00 மணிமுதல் 9.00 மணிவரையில் இடம்பெற்றது. Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 26 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,054 பேர் உயிரிழந்துள்ளனர்
இலங்கையில் மேலும் 1,220 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 பேராக அதிகரித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, வத்துப்பிட்டிவல (கம்பஹா) மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.